இது ஊழல் இல்லையா உச்சா நீதிமன்றமே?
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உச்சா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில மக்களிடம் மரண அடி வாங்கி முடங்கிக் கிடந்த ஏழைத்தாயின் மகனின் எடுபிடிகள் துள்ளிக் குதிக்கிறார்கள்.
ரஃபேல் போர் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிப்பதற்காக பிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் இன்னொரு ஏழைத்தாயின் மகனான அனில் அம்பானியின் "ரிலையன்ஸ் டிஃபன்ஸ்" நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்காக வாங்கப்படும் விலை உயர்ந்த போர் விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கப் போகும் "ரிலையன்ஸ் டிஃபன்ஸ்" நிறுவனத்துக்கு நீ........ண்.......ட அனுபவமும், நெ........டி.........ய பாரம்பரியமும் உண்டு.
ஆமாம், இந்த டுபாக்கூர் கம்பெனி துவங்கப்பட்டது மார்ச் 28, 2015 அன்று. வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கப்பட்ட லெட்டர் பேடு கம்பெனி இராணுவம், விமானப்படை, கடற்படை என யாருக்காகவும், எதற்காகவும் ஒரு குண்டூசியைக்கூட தயாரித்தது கிடையாது. அனில் அம்பானியின் போலி கம்பெனி தயாரிக்கும் மோசடிப் பொருட்களை வைத்துக்கொண்டு விமானம் தயாரித்துப் போரிட்டால், இந்தியாவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் ஏழைத்தாயின் மகனுக்கு கவலையில்லை. தனது தேர்தல் செலவுக்குப் பணம் தரும் தனது ஆதரவாளர் ஒருவர் பெரும் லாபம் அடையவேண்டும். அவ்வளவுதான்!
Company Name: RELIANCE DEFENCE LIMITED
Company Sub Category: Non-govt company
Date of Incorporation: 28 March 2015
Age of Company: 3 years, 8 month, 18 days
(As on September 17, 2018)
Date of Last Annual General Meeting: 28 August 2017
Date of Latest Balance Sheet: 31 March 2017
Directors of Reliance Defence Limited are: Lalit Jalan, Anthony Jesudasan, Sateesh Seth and Anil Dhirajlal Ambani.
No comments:
Post a Comment