Tuesday, December 18, 2018

சாவித்திரி கண்ணன்

மன்மோகன் சிங் மிக சிறந்த பிரதமர் என்று நிச்சயமாக சொல்லமாட்டேன். அவர்  அடித் தட்டிலுள்ள இந்திய மக்களின் தேவைகளை அறியாதவராக பல நேரங்களில் வெளிப்பட்டுள்ளார். குறிப்பாக,இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேற வேண்டும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் விவசாயத்தை மேற்கொள்ளக் கூடாது...என்றெல்லாம் பேசிய போது, மிகவும் நொந்து போன நேரங்களெல்லாம் உண்டு.

ஆனால், அவர் அதிகாரமில்லாத பிரதமர் என்றும், சோனியாவின் அடிமை போல நடந்து கொள்கிறார் என்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் வைத்த குற்றசாட்டு நியாயமற்றது. நான்கு வருட மோடியின் நடவடிக்கைகளை நன்கு அவதானித்த பிறகு நான் உணந்தது, மோடி சுயமாக செயல்படவில்லை. அவர் ஆர் எஸ் எஸ் சால் பின்னிருந்து சாவி கொடுத்து இயக்கப்படும் வீரமான தோற்றம் கொண்ட ஒரு ரோபர்ட்.அதனால் தான் அவர் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது,உலகம் சுற்றக் கிளம்பி விடுவார்.

ஆர் எஸ் எஸ் எழுதி கொடுத்த விஷயங்களை மேடைகளிலும்,வனொலியிலும்,தொலைகாட்சிகளிலும் சமர்த்தாகப் பேசுவார்.இப்படி செயல்பட அத்வானியால் முடியாது என்பதால் தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே என் அனுமானம்! ஏனென்றால்,அத்வானி சுய சிந்தனையாளர். பாக்கிஸ்த்தான் சென்ற போது மிக இயல்பாக முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து பேசி ஆர் எஸ் எஸ்சின் கடும் கண்டணத்திற்கு ஆளானவர்.பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி மக்கள் உணர்வுகளை பிரதிபலித்துவிடுவார்.

எனவே தான் ஆர் எஸ் எஸ் அறிவுறுத்தல்படி பத்திரிகையாளர்களைசந்தித்துப் பேசாமல் மோடி தவிர்க்கிறார். ஏனெனில், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தால், மோடியின் சுயம் அம்பலப்பட்டுவிடுமல்லவா? ஆனால்,மன்மோகன் சிங்கிற்கு எந்த நேரத்திலும் பத்திரிகையாளர்களை எதிர் கொள்ளும் திராணி இருந்தது! நிச்சயமாக சொல்வேன் மோடியை விடவும் மன் மோகன் சுயமாகத் தான்,சுதந்திரமாகத் தான் செயல்பட்டார்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...