கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு, பெருமாள் சிலை செய்ய , நம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து மலைகள் குடையப்பட்டு , 610 டன் பாறைகளை லாரியில் ஏற்றிச்செல்லப்படுவதாக இன்றயை தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.
தினமணி நாளேடு ஒரு ஆன்மிக பத்திரிகை என்பதால் , இச்செய்தியை பெருமையேடும் , பாறை பத்திரமாக கர்நாடக மாநிலம் செல்ல வேண்டும் என்றக்கவலையோடும் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக டன் எடை கொண்ட பாறை என்பதால் , லாரியின் டயர்கள் வெடித்துள்ளதாம். பாறை தங்குதடையின்றிச்செல்ல, சாலையெங்கும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்கின்றார்களாம்.
* கர்நாடக கோயிலுக்கு பெருமாள் சிலை செய்ய , ஏன் தமிழ்நாட்டு மலையைக் குடைய வேண்டும் ?
* இம் மலையை உடைக்க எதன் அடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்கியது ?
* இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளைக்கு அரசுக்கு சொந்தமான மலைகளை விற்பனை செய்ய சட்டத்தில் இடமுள்ளதா ?
* கர்நாடகாவில் மலைகளே இல்லையா?
* நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு, நம் இயற்கை வளமான மலைகளை குடைந்து அனுப்ப அனுமதி தத்தது யார் ?
- தாகம் இதழுக்காக....மரு.தாமோதரன்
# பூவுலகின் நண்பர்கள் கவனத்திற்கு
No comments:
Post a Comment