Sunday, December 16, 2018

சுந்தர்ராஜன் பூவுலகின் நண்பர்கள்

கல்பாக்கத்தில் அணு உலைகள் 1980களில் இருந்து இயங்கிவந்தாலும், அந்த பகுதியில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் செயல்படுத்தவேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தன அரசுகள் மற்றும் அணுசக்தி துறையினர்.

2011 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உள்ள விஷயங்களை செயல்படுத்தவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழ.வெற்றிச்செல்வன் பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைகளை கடந்து 2015ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசு செய்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளை குறிப்பிட்டு, கதிர்வீச்சு சம்மந்தப்பட்ட அவசரகால சிகிச்சைகளை (super speciality hospital டு treat radiological emergencies) அளிக்கும் உயர்தர மருத்துவமனை இல்லாததை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உடனடியாக அதை அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

அடுத்த ஒரு வருட காலத்திற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் மறுபடியும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. எங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், 16.02.2016 ஆம் ஆண்டு, ஒருமாதகாலத்திற்குள் "அந்த உயர்தர" மருத்துவமனை குறித்த அறிவிப்பாணையை வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டது. அதன்பிறகும் மருத்துவமனை குறித்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த ஓர் ஆண்டிற்கு முன்னர், நாங்கள் "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்", அது இன்றைக்கு விசாரணைக்கு வருகிறது.உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

"சட்டப்படி நடங்கள்" என்று சொல்வதற்கே "சட்டப்போராட்டம்" நடத்தவேண்டிய சூழலில்தான் நம்நாடு இருக்கிறது.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...