Monday, December 17, 2018

விஜயசங்கர் ராமச்சந்திரன்

35 லட்சம் வேலைகள் இழப்பு

கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறு வர்த்தகத் துறையிலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களிலும் 35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டிருப்பதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.  இந்தத் துறைகளைச் சேர்ந்த 34000 பேரிடையே அக்டோபர் 1 முதல் 30 வரை நடத்தப்பட்டிருக்கிறது இந்த சர்வே.
மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சுயதொழில் செய்யும் சவரத் தொழிலாளிகள், செருப்புத் தைப்பவர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள்.
பிளாஸ்டிக் உற்பத்தி, தீக்குச்சி மற்றும் பட்டாசுத் தொழில்கள், தோல் பதனிடும் தொழில், தையல், கல் உற்பத்தி, அச்சு தொழில் போன்ற முறைசாராத் தொழில்களும் நசிந்து போயிருக்கின்றன.
இதற்கு முக்கியக் காரணமாக உற்பத்தியாளர் சங்கம் கூறுவது என்ன?
“2015-16 ஆண்டுகளில் புதிய அரசாங்கம் பதவியேற்றதால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக எல்லாத் தொழில்களும் வளர்ந்தன. அதற்கு அடுத்த ஆண்டில் வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினாலும், பின்னர் ஜி எஸ் டி அமுலாக்கச் சிக்கல்களினாலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதற்குப் பின் நிதி இல்லாமையாலும், அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய தொகை நிலுவையின் காரணமாகவும் வீழ்ச்சி தொடர்கிறது”
2014-15 இல் 100 நிறுவனங்கள் லாபமீட்டின என்று எடுத்துக் கொண்டால் இன்று 30 நிறுவனங்களே லாபம் தருகின்றன என்றும் சர்வே கூறுகிறது

இணைய வர்த்தகத்தின் கடுமையான போட்டியினால் மற்ற வர்த்தகர்களும் தங்கள் கடைகளை மூடி வருகின்றனர். இந்தக் கடைகளின் வாடகை வருமானத்தை இழந்த குடும்பங்களும் தவிக்கின்றன என்றும் அது கூறுகிறது.
மேக் இன் இண்டியா!
(ஆதாரம்: தி இந்து, டிசம்பர் 17, பக்கம் 13)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...