Sunday, December 9, 2018

நாச்சியாள் சுகந்தி

21ஆம் நூற்றாண்டிலும் ஒருபெண் மறுமணம் செய்துகொள்வது பெரும் புரட்சியாகப் பார்க்கப்படும் சமூகம் எப்போது வளர்ந்து வல்லரசு ஆகுமோ?
ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது இயற்கையின் நியதி.அவ்வளவுதான்.

சமூக ஒழுக்கம் என்பது பெண்ணின் தொடைஇடுக்கில் மட்டும் இருப்பதில்லை.சாதியே   இல்லா,சமத்துவமும் சமூக ஒழுங்குதான்.அந்த ஒழுங்கைநிலைநிறுத்துவதில் உங்கள் பங்கென்ன?

சங்கர் இறந்து 4 வருஷத்துக்குள்ளா அடுத்த கல்யாணமா என கேட்கும் சமூகம், கௌசல்யாவின் பாதுகாப்புக்கோ சுயகௌரவத்துக்கோ என்ன செய்தது?

சங்கரை,சாதி திமிர் கொலைசெய்திருக்காவிட்டால் அவள் ஏன் இன்னொரு திருமணம் செய்துகொள்ளப்போகிறாள்?

மனிதர்களை,காதலர்களை சாதியின் பெயரால் கொல்வதற்கு வெட்கப்படக் கற்றுக்கொள்ளுங்கள் மானிடர்காள்!

உலகம் எங்கோபோய்க்கொண்டுள்ளது.இந்த இந்தியாவில்தான் சாதியின் பெயராலும்,மாட்டின் பெயராலும் மனிதர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறையாவது...இந்த கேடுகள் நிறைந்த சிந்தனையில் இருந்து வெளிவர உதவுங்கள்.இல்லையெனில் வாய்மூடி இருங்கள்.சமூகம் தன்னைத் தானேசுத்திகரித்துக்கொள்ளும்.

பி.கு.அறுத்துக் கட்டும் பழக்கமும் மறுமணமும் உழைக்கும் வர்க்கத்தில் இயல்பான விஷயம்.திடீரேன ஒரேசமயத்தில் எல்லாரும் பூணூல்  போட்டுக்கொள்ளாதீர்கள்.

#கௌசல்யா_சக்தி__மறுமணம்்
#வாழ்த்துகள்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...