இடைசாதிக்குள்ளேயும் மூன்றாம்தர பார்ப்பன சிந்தனை ஊடுவுவது மொத்த சமூகத்துக்கும் ஆபத்து.
அப்படியான சிந்தனையில் ஊறியவர்கள் தான் மறுமணம் தவறு என்பார்கள். ஆனால் இடைநிலைச் சாதிகளில் மறுமணமும் இணையரைப் பிடிக்காவிட்டால் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி அறுத்துக்கட்டும் பழக்கமும் மிக இயல்பான விஷயம்.
இன்று கௌசல்யாவின் மறுமணத்தை எதிர்க்கும், ஆபாசமாகப் பேசும் அனைவரு்க்குள் இந்த மூன்றாம் தர பார்ப்பன சிந்தனை எப்படியோ ஊடுருவி உள்ளது.
கிராமங்களில் இன்றும் மறுமணமும் அறுத்துக்கட்டும் வழக்கமும் இயல்பாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது நாகரீகம் என்ற பெயரில் பார்ப்பனர்களின் ் கேடுகெட்ட பழக்கவழக்கங்களை கடன் வாங்கி அத்னை வைத்து தன் சமூக பழக்கவழக்கங்களையே கேவலமாகப் பேசு/எண்ணும் போக்கு அதிகரிக்கிறது.
மூத்த தலைமுரையினர் தான் இம்மாதிரியான விஷயங்கள் நம் சமூகத்தில் நடந்துள்ளது என்பதை இளையதலைமுறைக்கு எடுத்துச் ச்சொலல்வேண்டும். விதவை என்றால் மொட்டை அடிப்பதும் தனி ஆடை கொடுப்பதும் எல்லா சமூகத்திலும் இருக்கின்ர பழக்கமில்லை.
அதுவும் கிராமங்களில் மறுமணம் செய்வது புரட்சி என்று யாரும் சொன்னதில்லை. அது இயல்பான சமூக நடப்பு என்றே கருதி வந்தார்கள்.
ஒட்டுமொத்தமாக பலர் பார்ப்பனிய சிந்தனைகளை தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்குவதன் வெளிபாடுதான் கௌசல்யாவை நோக்கிய இந்த வசைகள்.
No comments:
Post a Comment