எல்லோரும் பிரச்சாரம் செய்தார்கள், மக்களுக்காகப் போராடினார்கள். அரசியல் ரீதியாக வென்றார்கள் . 'அவர்' ஒருவர் மட்டுமே நம் இனத்துக்காக போரிட்டார். களத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் பலி கொடுத்தார்.
கருஞ்சட்டை மாநாட்டில் தலைவர் பிரபாகரன் படம் வைத்தது நூறு சதவிகிதம் சரி.
வெறும் கொள்கைகளை வைத்துக்கொண்டு என்னக்கிழித்தோம் ? தமிழக இளைர்களுக்கு அவசர அவசியத்தேவை.... துணிச்சல். அது தலைவர் பிரபாகரனின் முகம் பார்க்கும் போது மட்டுமே கிடைக்கும். மாநாட்டில் கலந்துகொண்ட கருஞ்சட்டைகள் பலர் (50 வயதை நொருங்குபவர்கள்) ஈழ விடுதலைப்போரில் பின்னிப்பிணைந்தவர்கள் .
திராவிடம் தமிழ்த்தேசியம் எந்தப்புள்ளியில் இணைந்தாலும் அது காவிகளுக்கும் காங்கிரஸ்சுக்கும் நிரந்தர சங்கு. அதை தாங்கிக்கொள்ளும் மனத்திடம் இல்லாதவர்களே, 'கருஞ்சட்டை மாநாட்டில் பிரபாகரன் படம் ஏன் ?' என்று கேள்வி கேட்கின்றனர்.
போருக்கு முன்பு 'நக்கீரன்' இதழில், ஜகத்காஸ்பர் எழுதிய தொடரில், தலைவர் பிரபாகரன் நேர்காணல் வெளியானது.
கேள்வி- நீங்கள் தீவிர முருக பக்தரா?
தலைவர் பிரபாகரன் பதில்- அதெல்லாம் அப்போ. உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால் , எம் மக்கள் இத்தனை துன்பம் அனுபவிப்பதை பார்த்துக்கொண்டு இருப்பாரா ?
கருஞ்சட்டை மாநாட்டில் தலைவரின் கட்டவுட் நிற்பதற்கு இதைவிட ஒரு காரணம் வேண்டுமா ?
உண்மையான பெரியாரிஸ்டுகள் ஒருபோதும் தலைவர் பிரபாகரனை எதிர்த்தது இல்லை. எதிர்க்வும் போவதில்லை.
மூடுங்கடா .....
- தாகம் செங்குட்டுவன்
Clicking Here cheapjerseys4sale,cheapjerseysland,2013cheapjerseysstore,betjerseysports,cheapjerseysshopchina,cheapjerseys4sale,orgcheapjerseys,cheappauthenticjerseyss,cheapjerseysup
ReplyDelete