எதிலும் வீழ்த்த முடியாத தமிழகம்....
எயிட்ஸ் நோயால் வீழ்த்தப்படுகிறதா?
-----------------------------------------------------------------
உலகில் எங்கும் நடக்காக் கொடூரம் தமிழ் நாட்டில் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே எயிட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வில் முதலிடம் வகித்த தமிழகம் , இன்று அரசின் அலட்சியத்தால் அதே நோயால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிப் பெண் முதல் எயிட்ஸ் பலி. அவரைத் தொடர்ந்து சென்னை மாங்காடு பெண்ணுக்கு , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி கிருமி தொற்று. இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தப் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி தொற்று.
நாளை தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் இதே போல் எயிட்ஸ் அபயக்குரல் ஒலிக்கும் என்றுத் தெரியாது.
பா.ஜ.க அடிமை அரசு என்று குற்றம்சாட்டப்படும் எடப்பாடி அரசின் மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டு மட்டுமே சுமத்தப்பட்டது.
இப்போது கிளிம்பி இருக்கும் அப்பாவி மக்கள் மீதான எயிட்ஸ் நோய் தாக்குதல் குற்றச்சாட்டால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே திக்குமுக்காடி நிற்கிறது.
குட்கா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் அலட்சியத்தால் இந்த எயிட்ஸ் பயங்கரம் தமிழ்நாட்டையே அச்சுறுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு அரசு என்னென்னமோ வாக்குறுதிகளை தந்தும் , பிரச்சனை பெரிதாக வெடித்து வருகிறது. காரணம் இது முழுக்க முழுக்க நிர்வாத்திறனற்ற அரசால் நிகழ்ந்த மிகப் பெரும் வபரீதம்.
இன்று நடைபெற்ற ஓர் அரசு விழாவில், " 2025 க்குள் காசநோய் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்படும் " என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசி உள்ளார். வெட்கம் வெட்கம்,
ஒரு எயிட்ஸ் நோயாளியைத் தாக்கும் முதல் நோயே காச நோய்தான். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் ரத்த தான மற்றும் ரத்த வங்கிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் விற்று விட்ட தமிழக அரசு, இப்போது இலவச எயிட்ஸ் நோய் கேந்திரமாக தமிழகத்தை மாற்றி உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ரத்தம் ஏற்றிக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கடந்த மூன்று நாள்களாக தூக்கமின்றித் தவிக்கின்றனர். தாமும் எயிட்ஸ் நோய்க்கு பலியாகி இருப்போமோ? என்ற பயத்திலேயே அவர்களின் பாதி உயிர் போய்விட்டது.
இன்றுவரை உண்மையை மூன்று பெண்கள் மட்டுமே வெளியிட்டுள்ளனர்.இன்னும் இன்னும் எத்தனை ஆயிரம், லட்சம் மக்கள் அநியாயமாக இந்த நோய்க்கு பலியாகி இருப்பார்கள்?
எதிர்க் கட்சிகள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் , இந்த மனித உரிமை மீறலை ஒரு சாதாரண சம்பவமாக கடந்த செல்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்தே அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் , அவர்களை மையப்படுத்தி வியாபாரம் செய்யும் ஊடகங்கள், தமிழக அரசின் இலவச எயிட்ஸ் நோய் சேவையை துளியளவு கூடு கண்டு கொள்ளவில்லை.
மீத்தேன் , ஸ்டெர்லைட், நியூட்ரினோ , எட்டுவழிச்சாலை , இயற்கைச் சீற்றம் என பலப்பல சோதனைகளை கடந்து வந்த தமிழகத்தை , எயிட்ஸ் எனும் எமன் மூலம் ஒட்டுமொத்தமாக அழிக்க நினைக்கிறார்களோ ? என்ற படுபயங்கர அச்சம் இன்னும் ஏன் யாருக்கும் உரைக்கவில்லை?
சோதிக்கப்படாத ரத்தம் சர்வசாதாரணமாக மக்களுக்கு ஏற்றப்படுகிறது என்றால் , உலக சுகாதார மையம் என்னப் புடுங்கிக்கொண்டு இருக்கிறது ?
தமிழக அரசு , இந்திய அரசு இதுவரை ஏன் சுகாதாரத்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்கவில்லை?
இதுவரை ஏன் மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கத் தொடுக்கவில்லை?
தமிழக அரசின் இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை இதுவரை ஏன் எதிர் கட்சிகள் கண்டிக்கவே இல்லை?
மீண்டும் கேட்கிறோம்.....
மீத்தேன் , ஸ்டெர்லைட், நியூட்ரினோ , எட்டுவழிச்சாலை , இயற்கைச் சீற்றம் என பலப்பல சோதனைகளை கடந்து வந்த தமிழகத்தை , எயிட்ஸ் எனும் எமன் மூலம் ஒட்டுமொத்தமாக அழிக்க நினைக்கிறார்களோ ? என்ற படுபயங்கர அச்சம் இன்னும் ஏன் யாருக்கும் உரைக்கவில்லை?
தமிழக அரசின் அலட்சியத்தால் உங்கள் வீட்டிலும் ஒரு எயிட்ஸ் நோயாளி இருக்கலாம் ......
# தாகம் இதழுக்காக ....வெ.மாதவி
No comments:
Post a Comment