Monday, December 17, 2018

டி.வி.எஸ்.சோமு

குறிப்பிட்ட ஒரு பதிவை மட்டும் படித்து..  .. அதையும்  வேறு வகையில் புரிந்துகொண்டு  சம்பந்தப்பட்டவரை ஒட்டுமொத்தமாக விமர்சிக்கும் போக்கு தொடர்கிறது.

கவிஞர்  சகோதரி தாமரை அவர்கள்,  அசைவத்தை தவிருங்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டார் போலும். உடனே சிலர், “தாமரை சங்கி ஆகிவிட்டார்.. காவி ஆகிவிட்டார்” என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள்.

அசைவத்தை ஒதுக்கினால் சங்கியா, காவியா? பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற வள்ளலார் அசைவத்தை ஏற்காதவர்தான்.

சகோதரி தாமரை அவர்களின் பதிவுகள் மற்றும் பிறர் பதிவில் அவரது பின்னூட்டங்களை அவ்வப்போது நான் பார்த்தது உண்டு. அவர் இந்து மதத்தை மட்டும் அல்ல பிற மதங்களையும் விமர்சிப்பவராக “எம் மதமும் சம்மதமில்லை” என்கிற கருத்துடையவராகவே இருக்கிறார்.

“பகுத்தறிவுவாதி”, “நாத்திகர்”, “முப்போக்குவாதி” என்று சொல்லிக்கொள்ளும் பலர் இந்து மதத்தை மட்டும் விமர்சித்துவிட்டு பிற மதங்களுக்கு கொடி பிடிப்பதுபோல சகோதரி தாமரை செய்வதில்லை.

ஆகவே உண்மையான பகுத்தறிவுவாதி, முற்போக்குவாதி, நாத்திகர், சகோதரி தாமரை அவர்கள்தான்.

அவரது முகநூல் பக்கத்தை கொஞ்சம் பார்த்தாலே இது புரியும்.

தவிர திரைத்துறையில் இருந்தாலும் காலத்துக்கேற்ப தனது கருத்தை மாற்றிக்கொள்ளாது இன்றும் தமிழ், தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்பதையும் அறியலாம்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  நட்பு சக்திகளையும் விமர்சிக்காதீர்கள்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...