Wednesday, December 26, 2018

அருள் எழிலன்

விருதுநகர் ஹெச்.ஐ.வி ரத்தம் – ஒரு பெண் மட்டுமல்ல பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

ஹெச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட ரத்தத்தை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஏற்றிய  விவகாரத்தில் கீழ் மட்ட ஊழியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து ஒரு  ஆறுமுகச்சாமி கமிஷன் போன்று இன்னொரு கமிஷன் போட்டு அவர்களுக்கு சாப்பிட பெட்டி பெட்டியாக மிக்சர்களையும் கொடுத்து கதையை முடிக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விவகாரம் அத்தனை எளிமையானது அல்ல,  ஹெச்.ஐ.வி தொற்று இருக்கிறது என கண்டறியப்பட்ட ஒரு நபர் உடனே தன் ரத்தத்தை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்ற வேண்டாம் என்ற தகவலைச் சொல்கிறார். ஆனால். துரதிருஷ்டவசமாக அவர் பல ஆண்டுகளாக ரத்தம் கொடுக்கும் டோனர் என்று சொல்கிறார்கள்.
2016-ஆம் ஆண்டிலிருந்து ரத்தம் கொடுத்து வருகிறார்.  அந்த நபர் ரத்தம் கொடுத்த ரத்தம் எத்தனை பேருக்கு ஏற்றப்பட்டது. இப்போது பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளைப் போல எத்தனை பெண்கள் , ஆண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரத்தம் கொடுத்த நபர் பல ஆண்டுகளாக இதே வேலையில் இருக்கிறார் என்றால். மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது.
உடனே விருது நகர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் விசாரணை நடத்தி 2016-ஆம் ஆண்டில்  இருந்து ரத்தம் தொடர்பான சிகிச்சைகளை ஆய்வு செய்து விரிவான விசாரணையை நடத்த வேண்டும்!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...