Wednesday, December 26, 2018

ராஜவேல் நாகராஜன்

"ஜிப்ஸி படப்பிடிப்பில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களுடன் பிரபாகரன் படம் வைத்திருந்தது எவருக்குமே உறுத்தவில்லையா! பிரபாகரன் ஒரு ராணுவத் தளபதி; ஒரு நிர்வாகி; ஒரு போராளி. மற்ற மூவரும் ஒரு சிந்தாந்தத்தை உருவாக்கியவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், பெரும் சீர்திருத்தவாதிகள். பிரபாகரனைக் கலைஞருடன் வேண்டுமானால் ஒப்பிடலாம்."

இப்படி ஒரு கருத்தாழமிக்க ஸ்டேட்டஸ் போட்டிருப்பவர் என் பள்ளிக்கூட நண்பர். இதுவரை 15 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். எழுத்துலகம் உன்னிப்பாக கவனிக்கும் நம்பிக்கைக்குரிய வளர்ந்துவரும் எழுத்தாளர்.  என் நண்பன் என்றாலும் இந்த ஸ்டேட்டஸ் என்னை கொதிப்படையச் செய்கிறது. தன் சொந்தங்களுக்காக அமைச்சரவை இலாகா வாங்க யார் காலையும் பிடித்தவரல்ல எம் தலைவர். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர் அல்ல எம் தலைவர், தமிழினத்தையே பிழைக்க வைத்தவர். இன்னும் நிறைய பேசலாம். நண்பர் என்பதால் நேரில் சீக்கிரம் ஒரு நாள் சண்டை போட்டு தீர்த்துக்கொள்கிறேன்!

இதில் மற்றொரு எழுத்தாளர் என தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்ட இணையதள ஸ்டார் எழுத்தாளர்!!? அங்கே கமென்டில் சொல்கிறார், வேண்டுமென்றால் பிராபகரனை ஜெயலலிதாவோடு ஒப்பிடுங்கள் என்று! அதற்கு ஒரு பதினைந்து இணையதள ஜால்ராக்களின் லைக் வேறு!

இவருக்கு தலைவர் பிராபகரனை பற்றி என்ன தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஊழலில் ஊறித்திளைத்த, ஜெ.வுடன் யாரை ஒப்பிடுவது. முட்டாள்.

இந்த ஒப்புமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட தலைவர் எம் பிரபாகரன்.

புலிகள் நடத்திய அரசாங்கம் எப்படிப்பட்டது என அறியாதவர்களுக்கு என்ன சொல்வது? தலைவர்  பிராபகரனுக்கு இல்லாத சிந்தாந்தமா?  மக்களுக்காகவே வாழ்ந்து, களமாடி, பெற்ற பிள்ளைகளையே போருக்கு இரையாக்கி, கடைசி நாள் யுத்தம் வரை களத்தில் நின்று கொண்ட கொள்கையில் சற்றும் பின் வாங்காத என் தேசிய தலைவர் மேதகு.பிராபகரனுக்கு ஈடாக இங்கு யாருமே இல்லை. இது வெறும் Glorification அல்ல. போதுமான அளவு புத்தகங்களை படித்து, அந்த நிலத்தில் வாழ்ந்த என் சொந்தங்களோடு பேசி தெரிந்து, தெளிந்து சொல்கிறேன்!

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் வரிசையில் வைக்கப்பட வேண்டிய தலைவர் பிராபகரன் மட்டுமே!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...