இந்த ஆட்சியாளர்களிடமெல்லாம் நாம் இதை எதிர்பார்க்கலாமா...?
இந்த நூற்றாண்டின் தமிழின் மிக முக்கிய படைப்பாளி பிரபஞ்சனுக்கு இந்திய அரசு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கி கெளரவித்தது.இறுதிச் சடங்கில் அரசு மரியாதை தந்து புதுவை அரசு அங்கீகரித்தது! ஆனால்,தமிழக அமைச்சரவையோ அஞ்சலி தீர்மானத்திற்கான பெரிய பட்டியலில் ஒரு பெயராகக் கூட பிரபஞ்சன் பெயரை இணைக்கவில்லை....!
ஊழலில் ஊறித் திளைக்கும் சுயமரியாதையற்ற அடிமை ஆட்சியாளர்கள் தன்மானமே பெரிதென வாழ்ந்த ஒரு இலக்கியவாதியை அறிந்திருக்க வாய்ப்பில்லை தானே!
அதுவும் தில்லி பாராளுமன்றத்தில் ப ஜ காவிற்கு சேவகம் செய்யும் விதமாக எதிர்கட்சியினர் பேசும் போதெல்லாம்கூச்சல்,குழப்பம்...என்பதாக,மையப்பகுதிக்கு வந்து அவையை ஸ்தம்பிக்க செய்து, பா ஜ க அரசு குறித்த விமர்சனங்களை முடக்கி,கிட்டத்தட்ட அடியாளைப் போலச்செயல்படும் எம் பி க்களைக் கொண்ட ஒரு கட்சியின் ஆட்சியாளர்களிடம் சமூகத்தை மேம்படுத்தவே தன் பேனாவை பயன்படுத்திய ஒரு எழுத்தாளனுக்குரிய மரியாதையை -- இறுதி அஞ்சலியை -- எதிர்பார்பது தான் முட்டாள்தனம்!
தி மு க எதிர்ப்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்டுள்ள பா ஜ க , அதன் பொருட்டு எந்த
அநீதிகளையும் ஜீரணிக்க தயாராக இருக்கும்.., நம்மை தூக்கி சுமந்தே தீரும் என்ற நம்பிக்கையில்.., ’’நம் காட்டில் மழை தான்’’ என்று கொட்டமடிக்கும் அ தி மு க வை இடைத் தேர்தலில் வாய்ப்பை பயன்படுத்தியாவது வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்றால்,அதற்கும் வழியில்லாமல் 19 தொகுதிகளின் தேர்தலை நிறுத்தி வைத்து ,திருவாரூர் தேர்தலை மட்டும் அறிவித்துள்ளார்களே இதன் சூழ்ச்சி என்னவாக இருக்கும்....?
திருவாரூர் இடைத் தேர்தலில் கலைஞர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் நிற்க
வைக்கப்படலாம்..அப்படி நடக்கும் பட்சத்தில்,அந்த கட்சியின் மீதுள்ள கொஞ்ச நஞ்ச மக்கள் நம்பிக்கையும் தகர்ந்து போகக் கூடும்... என்பது கூட
பா ஜ க வின் நம்பிக்கையாக இருக்கக் கூடும்...!
திருவாரூர் இடைதேர்தல் வேட்பாளர் தேர்வில்
தி மு க வின் குடும்ப ஆதிக்கத்தின் நீட்சி வெளிப்படுமானால்...,’’யாரைத் தான் நம்புவதோ...?’’
என்பதே மக்களின் நிலைபாடாகிவிடும்.
No comments:
Post a Comment