Monday, July 23, 2018

கொற்றவை

நிதம்பஸ்தானம். (#வசுமித்ர கவிதைகள்)

மருங்குல் கொடையின் கீழிறங்குமருவி
தலைகீழ்ப்பாய்ச்செலன தவிக்கும் பெருங்கனா
குடிக்கும் தீம்பால்
சதா
திமிலென்னும் தொல் தோணிக்குகை
நவ்வென்றுறைத்தால் தகும் போதகச் சுழிக்கிளி
கர்ப்பமென வாய் திறக்கும் இளங்கன்றின்
விழிக்குருகு
கடிதடக்கனாக்கண் விரிகூந்தல் சிறுயிழை
அருஞ்சிறை காடென அழகில் விரியுமது
தொன்மாமுனி மருங்கிய நிழல்
பஞ்சமாசத்தமொலிக்க
குடலதிர உடலதிர தேம்பி வளரிளம்பயிர்

உன்மத்தம்
புலன் விறகு கொதிக்கும் மதனச் சுழிப்பித்தம்
சந்தாபம் என்மொரு அரவம் தைத்து தடம்பதிக்கும் வசீகரம்
மோகணமெனுமொரு சூதப்பூ
திரிகிழியத் தலைகீழ்க்கண்ணென விரியும் கண்டகக் கூர்
கணமழிக்கும்
கணத்தினழிக்கும் கணேமேயழிக்கும் கணத்தின் கணம்
பளுத்த இலை
பிறக்கும் சிசுகொள்வுதட்டுச்சாயல்
அரமியம் அச்சம் பல்குணம் பயம்
வீறிட்டலரும் செந்நாய்
பற்கள் கிழிக்கும் புன்னகைக் கொடுங்கோல்
தாபமறுக்கும் தாபச் சுழி
தியானமெனும் ஒளிச்சுடரில் தலைகீழ் நிலை
மத்திமம்
பிழையற்றவொரு ஞாலம்
மத்திகைகொண்டு நா நசுக்கும் கா
மம்மர் கிழித்துண்ணும் பெருஞ்சோறு
மதிற்சுற்றுக்கருவறையெனும் கோ
மோனயெனுமாதி அதுமுதல் தொடக்கம்
பருவமேட்டின் பைத்தியம்
சித்தமெனக் கிளர்ந்து பித்தம் தனைக் குடிக்கும் பித்தப்பிதிர்
செவ்வேல்
கரவேல்
கைகொண்டங்கா மாவேல்

பெரும்பாழ்கண்டு திகைக்கா இமை
சிறைச்சோறு தனிமை முதுபாலை
நசையொலிக்கும் காமர்
ஏறியடங்கும் நயப்பு
பிட்டல் பெட்பென்னும் பிரியம்
வெஃகலது வெப்பம்
துணை சேரின் விழி சேரின் உடல்சேரின்
சோகத்தைக் கொன்றொழித்து வெதுப்பு துய்ப்பென
மரணம் சேர் மாயக்குகை
வணங்கும் மண்யோ
நீ.....

(ஓவியம் ஜியார்ஜியா ஓ’ கீஃப்)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...