ஆறுமுகம் என்ற ஆட்டை அறுக்கப்போகும் அதிகாரிகள்
===========================
கோவையில் மாணவி லோகேஸ்வரி எதிர்பாராத விதமாக உயிரிழந்த கலைமகள் கல்லூரிக்கு முதலாளி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை..
அவரது மனைவி டாக்டர் பானுமதி தான் கல்லூரியின் தலைவர்..
இந்த தகவல் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக ஆறுமுகம் என்ற பயிற்சியாளரை பற்றி மாத்திரமே செய்தி வெளிவரும் வகையில் காவல்துறை மூலமாக மிக கவனமாக தமிழக அரசு பார்த்துக்கொண்டது.
காவல்துறையும்,கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுகம் பற்றியே தகவலை பரப்பியது..
ஆறுமுகம் என்ற அந்த பயிற்சியாளர் செய்தது முழுக்க முழுக்க தவறு தான்..ஏற்றுக்கொள்ளவே முடியாத காரியம்.
ஆனால்,,
அதே நேரம் யார் அவர் ? உண்மையான நபரா என்று தெளிவாக எதையும் விசாரிக்காமல் பயிற்சி கொடுக்க ஆறுமுகத்தை அழைத்த கல்லூரியின் முதல்வர்,தலைவர் ஆகியோரும் கைது செய்யப்படவேண்டியவர்கள் இல்லையா ?
அவர்களுக்கும் இந்த மரணத்திற்கும் சம்பந்தமில்லையா என்ன ?
கல்லூரியின் பெயர் கூட காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடாமல் இருக்க எப்படி எப்படியோ இந்த விவகாரத்தை அதிகாரம் திசை மாற்றிவிட்டது..
காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை
தப்பியோடிய சிலரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது..
எப்படியும்,கல்லூரி பெயரைக் காப்பாற்ற ஆறுமுகத்தை போலீஸார் பொலி போடப்போவது நிஜம்..
மற்றொரு விஷயம் ,,தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் இதே ஆறுமுகம் பேரிடர் மேலாண்மை பயிற்சியும்/உரையும் ஆற்றியிருக்கிறார்..
இதெல்லாம் தமிழக பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமலா இவ்வளவு நாட்கள் நடந்திருக்கும்
ஏதோ ஒரு வகையில் ஆறுமுகத்தை பயன்படுத்தி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விழிப்புணர்வுக்காக கொடுக்கும் பணத்தை நன்றாக தின்று ஏப்பம் விட்டுவந்த அதிகாரிகள் இப்போது மொத்தமாக நல்லவர்களாக மாறியுள்ளனர்.
ஆறுமுகத்தை திங்கப்போகின்றனர்...
அதுவும் ஏன் ? அப்படின்னா !
மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தில்
துணை சபாநாயகர் தம்பிதுரையின் பெயரோ,அவரது மனைவி பானுமதியின் பெயரோ வெளிவரக்கூடாது என்பது தான் காரணம்..
வேறென்னவாக இருக்க முடியும்,,
பேரிடர் மேலாண்மை தொடர்பாக கடந்த 2 வருஷமாக ஒரு எழவும் செய்யாத இந்த அரசு தம்பிதுரையின் கம்பெனியை காப்பாற்ற போராடும் போது தான் ஆறுமுகம் ஒரு மோசடிப் பேர்வழியென கண்டுபிடிக்க முடிகிறது என்றால்,
நம்முடைய கல்வித்துறையிலும்,காவல்துறையிலும் புத்திசாலிகள் நிரம்பி வழிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்...
பதிவு உதவி : Aravind Akshan
No comments:
Post a Comment