Tuesday, July 17, 2018

ராஜவேல் நாகராஜன்

வணக்கம் தோழர்களே!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்கும் வகையிலும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் சர்வதேச கூட்டமைப்பினை ஏற்படுத்தியும் தொடர்ச்சியான வேலைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மே பதினேழு இயக்கத்திற்கு கூட்டங்களை நடத்தவோ, போராட்டங்கள் நடத்தவோ அனுமதியினை மறுத்து வருகிறார்கள். சென்னையில் தோழர் திருமுருகன் காந்தியின் அலுவலகத்தினை செயல்பட விடாமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடக்கியுள்ளன.

இந்த தடைகளை எல்லாம் மீறி, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஜெர்மனியில், ஜெர்மானிய செயல்பாட்டாளர்களை இணைத்து ஒரு முக்கியமான கருத்தரங்கத்தினை மே பதினேழு இயக்கம் நடத்தியிருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலும் தூத்துக்குடி படுகொலையினை பதிவு செய்திருக்கிறது. மிகுந்த நிதிச் சுமைகளுக்கு மத்தியில் இதனை மே பதினேழு இயக்கம் செய்திருக்கிறது. தொடர்ச்சியாக பல முக்கியமான செயல்பாடுகளை ஐரோப்பிய செயல்பாட்டாளர்கள் மத்தியில் தோழர் திருமுருகன் காந்தி செய்து வருகிறார். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு இத்தகைய வலிமையான சர்வதேச உழைக்கும் மக்களின் கூட்டமைப்பு முக்கியம் என்று மே பதினேழு இயக்கம் உறுதியாக நம்புகிறது.

தனது தினசரி வருமானத்தை இழந்துதான் இந்த வேலைகளை எல்லாம் தோழர் திருமுருகன் காந்தி செய்து வருகிறார். ஐரோப்பிய நாடுகளில் மிகச் சாதாரண அறையில் தெரிந்தவர்களுடன் தங்கிக் கொண்டு, கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொண்டுதான் சமூகத்திற்கான வேலையை செய்து வருகிறார் திருமுருகன் காந்தி. அங்கு பேருந்துகளில் பயணம் செய்வதற்குக் கூட போதுமான பணம் இல்லாத அளவிற்குத் தான் இயக்கத்தின் நிதி நிலைமை இருக்கிறது.

மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் இந்த பணிகளின் முக்கியத்துவத்தை உணர்கிற தோழர்களிடம், அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளுக்கான நிதிப்பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். உங்களிடைய பங்களிப்பு எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது இயக்கத்தின் மிக முக்கியமான வேலைகளுக்கு உதவும் என்று நம்புகிறோம். மாதாந்திர நிதிப் பங்களிப்பினையும் தோழர்களிடம் எதிர்பார்க்கிறோம். தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பினை தோழர்கள் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு மே பதினேழு இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

Account Name: Nimir Publications
Branch: Karur Vysya Bank, Ashok Nagar
Account Type: Current
A/c no : 1278115000007792
IFSC code : KVBL0001278

குறிப்பு: தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமே நிதிப் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். ஈழத்தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். வெளிநாட்டில் வேலை செய்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் நிதிப் பங்களிப்பு செய்ய விரும்பினால், இந்தியாவில் உள்ள உங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கவும்.

நிதிப் பங்களிப்பு செய்யும் தோழர்கள் மறக்காமல், அந்த விவரத்தினை contact.may17@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

- மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு: 9884072010

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...