மறைப்பதற்கு ஒன்றுமில்லை!
அவரைத்தாண்டி "அவரை" யாராலும் பார்க்கவேமுடியாது. அவருக்கு, சிகிச்சையளித்த மருத்துவ நிபுணர்கள் விரட்டியடிக்கப்பட்டு அவரது குடும்ப டாக்டர் ஒருவர் மட்டுமே அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத்தொடங்கினார்.
அவருக்கான, நோய்கள் ராணுவ இரகசியம்போல் பாதுகாக்கப்பட்டன. அவர், அட்மிட் ஆன மருத்துமனையின் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டன. என்ன சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன என்று மறைத்தார்கள்.
யாருமே மருத்துவமனைக்குள் அவரது அறைக்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது, இரத்த சொந்தத்தையே அனுமதிக்கவில்லை. இப்படி, எல்லாமே இரகசியம் காக்கப்பட்டிருந்தால் என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேட்பதில் தவறில்லை.
ஆனால், எந்த இரகசியமும் மர்மங்களும் இல்லாமல் இருக்கும் கலைஞருக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேட்டுக்கொண்டிருந்தால் என்ன சொல்வது? ஏதாவது, நிகழ்ந்தால் அவர்களே சொல்லிவிடுவார்கள். மர்மமும் இல்லை...இரகசியமும் இல்லை. மறைப்பதற்கு ஒன்றுமில்லை!!!
No comments:
Post a Comment