Monday, July 16, 2018

விலை போன ரஜினி !!

மக்கள் எதிர்க்கும் அத்தனைத்திட்டங்களையும் ரஜினி வெளிப்படையாக ஆதரிப்பதைப்பார்த்தால் , அவர் ஆளும் அரசுகளின் கமிஷன் ஏஜென்ட்டாக மாறிவிட்டாரோ என்றுத் தோன்றுகிறது .

காவல்துறை மக்களைத் தாக்கினால் ரஜினி கண்டுகொள்வதில்லை. ஆனால், எங்கோ ஒரு செயலாக மக்கள் காவல்துறையினரைத்தாக்கினால் ரஜினிக்கு கடும் கோபம் வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடும்போது ரஜினி வாய் திறக்கவில்லை. ஆனால், துப்பாக்கி சூடு நடந்தபோது , அரசுக்கு ஆதரவாக பேசி, மக்களுக்கு வன்முறையாளர் பட்டம் வழங்குகிறார்.

இப்போது , மக்கள் எதிர்க்கும்  எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் ரஜினி.

" சமூக விரோதிகள் " என்ற இரண்டு வார்த்தைகளுக்காக ரஜினியின் " காலா " படு தோல்வி அடைந்தது.  கிட்டத்தட்ட 40 கோடிகள் நட்டம் என்பது நம்பத்தகுந்த வட்டாரத்தின் கணக்கு.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துவரும் ரஜினி, மீண்டும் மக்கள் எதிர்க்கும் திட்டங்களை ஆதரித்துப் பேசுகிறார் என்றால்....அவரது திரைப்பட நட்டங்கள் உடனுக்குடன் சரிகட்டப்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

" எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சிக்கோ ,  எந்த எட்டில் இப்ப இருக்கத் தெரிச்சிக்கோ ? "

எட்டுவழிச்சாலையை ஆதரிக்கும் ரஜினி இப்ப எந்த எட்டில் இருக்கிறார் ? மோடி எட்டிலா ? அமீத் ஷா எட்டிலா ?

- எழில்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...