இஸ்லாம் பாலியியல் சுதந்திரத்தை மறுக்கிறது. பெண்களுக்கு பாலியியல் சுதந்திரம் இல்லை போன்ற பத்தாம்பசலியான கருத்துகள் நிலவுகிறது. 15ம் நூற்றாண்டில் டுனிஷியா நாட்டை சேர்ந்த Muḥammad al-Nafzawi எழுதிய Perfumed Garden என்ற நூல் காமசூத்திராவை விட நூறுமடங்கு உக்கிரமானது. புணர்ச்சிக்கான் நேரம், இடம் பலவகையான positions என விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது..ஓரின சேர்க்கை, கை, வாய், கால் மூலம் உணர்வுகளை தூண்டும் முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் முதலில் இதை மொழிபெயர்த்தவர் கிழக்கிந்திய கம்பெனியில் இந்தியாவில் பணியாற்றிய முக்கிய ஆளுமை ரிச்சர்ட் பர்டன். 19ம் நூற்றாண்டில் மேற்கில் நுழைந்து இந்நூல் அதிர்வலையை உண்டாக்கியது. (காம சூத்திராவையும் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பர்டன்).
இஸ்லாமில் “ஹலால்” என்ற வார்த்தைக்கு ‘அனுமதிக்கப்பட்ட அல்லது முறைப்படுத்தப்பட்ட’ என இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்ட என்ற பொருளில் பயிலப்படுகிறது.
தூய இஸ்லாமிய வழக்குபடி தொழுகை, மசூதிக்கு செல்வது மற்றும் இதர இஸ்லாமிய சடங்குகளை கறாராக பின்பற்றுபவர்கள் படுக்கறையிலும் கட்டுப்பெட்டியாக இருப்பார்கள் எனற தவறான கண்ணோட்டத்தை சமீபத்தில் வெளிவந்த A Halal Guide to mind blowing sex என்ற நூல் தகர்க்கிறது. இந்நூலை எழுதியவர் மேற்சொன்ன இஸ்லாமிய சடங்குகளை பின்பற்றும் ஒரு பெண்மணி. இதை அவர் புனைப்பெயரில் எழுதியுள்ளார். பர்தா அணியும் பெண்கள் படுக்கறையில் சாகசத்தில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலின் முன்னுரையில் “You can be pure as snow and still be dirty in bed” என விவரித்து படுக்கையறை விளையாட்டுகளை அக்குவேறு ஆணிவேறாக அலசியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சம்போக positions ஐ விவரித்துள்ளார்.
ஆக இஸ்லாம் பிற்போக்கானது. பாலியியல் சுதந்திரம் இல்லை என்பதற்கெல்லாம் ஆதாரம் இல்லை…இந்நூல் தமிழில் வெளிவந்தால் நல்லது..
No comments:
Post a Comment