Saturday, July 21, 2018

கவிதா முரளிதரன்

நேற்று நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான பதிலில் பெண்களின் முன்னேற்றத்தில் தனது அரசுக்கு உள்ள அக்கறையை பற்றி பிரதமர் மோடி ஏதோ பேசியிருப்பார் போல. beti bachao beti padhao  என்கிற வார்த்தைகள் மட்டும் புரிந்தது.

சமீபத்தில் தாம்ஸன் ராயிட்டர் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு எதிராக அரசின் பதற்றம் நிறைந்த எதிர்வினைகள்தான் நினைவுக்கு வந்தது. இந்த அரசின் பிரச்னை, பெண் மீதான வன்முறையோ அல்லது அதற்கான தீர்வோ அல்ல. அது பற்றிய தகவல்கள் பரவலாக கூடாது என்பதுதான் என்கிற எனது ஆழமான நம்பிக்கையை அந்த எதிர்வினைகள் உறுதி செய்தன (இது குறித்து தினத்தந்தியில் எழுதிய சிறு கட்டுரையை கமெண்டில் இணைத்திருக்கிறேன்)

நேற்றும் அதுதான் நடந்திருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விடுவோம். சர்வதேசத்தை அதிர வைத்த ஆசிபாவின் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலையில் குற்றவாளி ஒருவருக்கு ஆதரவாக  வாதாடிய ஒரு வழக்கறிஞர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுதான் பெண் முன்னேற்றத்திலும், பெண் மீதான வன்முறைக்கு தீர்வு காண்பதிலும் இந்த அரசு காட்டும் அக்கறை.

தீர்வென்று இந்த அரசிடம் கோஷங்கள் தவிர வேறு எதாவது இருக்கிறதா?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...