Saturday, July 21, 2018

நாச்சியாள் சுகந்தி

உணவுக்கு ஏன் மனிதன் இப்படி அடிமையானான்?
மனித வாழ்வே உணவை சுற்றித்தான் அமைந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சாகப் போகும் கடைசி நிமிடத்திலும் மனிதன் தான் விரும்பிய சாப்பாட்டைப் பற்றி தான் நினைக்கிறான் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. அதை என் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு என் அத்தை ஒருவர் கேன்சர் ஆஸ்பத்திரியில் தன் கடைசி நிமிடங்களை கழித்துக்கொண்டிருந்தார். மருத்துவர்கள் அவர் தன் வாழ்நாளி்ன் இ்றுதியில் இருக்கிறார்.அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என கூறிவிட்டார். அவரை ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது.

அவர் தங்கியிருந்த அறையில் இன்னொரு பெண்மணியும் கேன்சருக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அவரது தாயார் தயிர் சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த அத்தை,  பேச இயலாத சூழ்நிலையிலும் கையை மெதுவாக உயர்த்தி, அந்தம்மாவை நோக்கி கொஞ்சம் சாதம் ஊட்டிவிட முடியுமா என்று கண்களாலேயே கேட்டார். அந்தம்மா தயங்கி தயங்கி, ஒருவேளை இதுதான் இவரின் கடைசி ஆசையாக இருக்குமோ என்று எண்ணினாரோ என்னவோ, பத்து பருக்கைகள் கொண்ட தயிர் சாதத்தை அவருக்கு ஊட்டிவிட்டார். அத்தை கடைசியாக சாப்பிட்டது அந்த கால் கவள தயிர் சாதம்தான்.

இப்படி சில அனுபவங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.ம்ம்ம்..எதற்கு இதை சொல்ல வந்தேன்? சில நாட்களுக்கு முன்பு எனக்கு தீராத இடுப்பு வலி. ஆங்கில மருத்துவரிடம் சென்றேன். அவர்கள் கொடுத்த மாத்திரை வலியை அப்போதைக்கு குறைத்ததே தவிர நிரந்தரமாக வலி குறையவில்லை. அடுத்து ஒரு சித்தா மருத்துவரிடம் சென்றேன். அங்கும் வலி குறைந்தபாடில்லை.
வலியால் துடித்துக்கொண்டிருந்த போது தம்பி ஜீவ கரிகாலன் போன் செய்தார். என் குரலில் தெரிந்த வலியின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர், அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டிடம் போக சொன்னார். அவரே அந்த தெரபிஸ்ட்டிடம் அப்பாயிண்ட்மெண்ட்டும் வாங்கிக் கொடுத்தார். தரமணியில் இருக்கும் அந்த கிளினிக்கு செல்லும்போது நம்பிக்கை இல்லை.
அந்த தெரபிஸ்ட் ஒரே ஒரு நிமிடம் காலில் ஒரு இடத்தை அழுத்தினார். சில நிமிடங்களில் வலி எங்கு போனது என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன கண்டிஷான் தான் கடினமாக இருந்தது. வலி முற்றிலும் குறையும் வரை தண்ணீர்வகை உணவு-லிக்விட் டயட் சாப்பிடுங்கள் என்றார். மூன்றுந் ஆளாக வெறும் கஞ்சி மட்டுமே சாப்பிட்ட எனக்கு, அட இப்படி சாப்பிட்டு உயிர்வாழ்வதற்கு வலியுடனே இருந்துவிடலாமோ என்று கூட தோன்றியது.மூன்று நாள் என்பது மூன்று வருடங்கள் போல் போனது. கஞ்சியை பார்த்ய்தாலே அத்தனை கோவம் வந்தது.
இன்று தெரபிஸ்ட்டுக்கு போன் செய்து வலி போய்விட்டது என்று கூறியவுடன் நீங்கள் விரும்பும் உணவை சாப்பிடலாம் என அவர் சொன்ன பிறகுதான் மனதிலிருந்த பெரிய பாரம் இறங்த்கியது போல உணர்ந்தேன்.அ துவரை அம்னதை எதோ அடைத்துக்கொண்டிருந்தது போல இருந்த ஒரு உணர்வு/பிளாக் சட்டென்று உடைந்தது.
அப்போது தோன்றியதுதான் இது...மனுஷ வாழ்வே சாப்பாட்டை சுற்றித்தான் இருக்கா?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...