Monday, July 16, 2018

சுந்தர்ராஜன்

எல்லா பிரச்சனைகள் குறித்து கருத்து மட்டுமே சொல்லும் அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலைகள்தான் உலகத்தின் தலைசிறந்த உலைகள் என்று பிரச்சாரம் செய்த முற்போக்கு விஞ்ஞானிகள், முற்போக்கு அறிவியலாளர்கள், அறிவியல் ஆலோசகர்கள் யாராவது சொல்லுங்களேன், "கூடங்குளம் அணு உலையின் இரண்டாவது அலகு என்னவானது என்று?"

கடந்த பிப்ரவரி மாதம் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் உலை ஏன் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று சொல்ல முடியுமா? இப்படி நடப்பது முதல் முறையல்ல, இதைப்போல் பலமுறை நிகழ்ந்துள்ளது.

நமக்கு தெளிவாக தெரியவருவது, அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதுதான், "கூடங்குளம் அணு உலைகள் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் ஆபத்து என்று. (It will blowup the entire South-India)

ஓ மன்னிக்கணும், இப்பதான் உங்களுக்கு நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யக்கூடிய வேலை வந்துவிட்டது இல்லையா, கூடங்குளம் திட்டத்தை நீங்கள் ஆதரித்தீர்கள் என்பதுகூட உங்களுக்கு மறந்துபோயிருக்கக்கூடும்!!!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...