Saturday, July 14, 2018

கலி பூங்குன்றன்

கோவை ஈஷா மய்யத்தில் முறைகேடுகள்.....

கோயம்புத்தூர் அருகே ஈஷா பவுண்டேஷன் நமது நிறுவ னத்தின் தலைமையகக் கட்டடங்களைக் கட்டியதில் மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து (ஜிலீமீ பிவீறீறீ கிக்ஷீமீணீ சிஷீஸீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ கிutலீஷீக்ஷீவீtஹ்-பிகிசிகி)  முறையான ஒப்புதலைப் பெறாமல் முறைகேடாக கட்டியுள்ளது என்று மத்திய தணிக் கைத்துறை அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

வனப்பகுதியில் யானைகள் செல்லும் வழித்தடப்பகுதிகளில்  ஈஷா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் கட்டுவது தொடர்பாக மாநில வனத்துறையின் சார்பில் 2012ஆம் ஆண்டில் இருமுறை அறிவிக்கை அனுப்பப்பட்டது. தடையில்லா சான்று கோரிய விண்ணப்பத்தை ஏற்காமல் 2013ஆம் ஆண்டில் மாநில வனத்துறை நிராகரித்துவிட்டது. எனினும், அதன் தொடர் நடவடிக்கையை மாநில வனத்துறை எடுக்காமல்  கட்டடப்பணிகளைத் தடுத்து நிறுத்தாமல் இருந்துள்ளது.

பின்னர் 2017ஆம் ஆண்டில் நிலைமை தலைகீழாகி, ஈஷா நிறுவனம் மீண்டும் அணுகியதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலர், வனத்துறை முதன்மை ஆணையரின் பரிந்துரையைக்கொண்டு, ஈஷா நிறுவன கட்டடங்களுக்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனுப்பிவைத்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச்சு இறுதியில் பொருளாதாரத் துறைகள்குறித்த மத்திய தணிக்கைத்துறை ஆய்வில், யானைகள் வசிக்கின்ற வனப்பகுதியை நகரமயமாக்கல் திட்டத்தின்கீழ் சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுநாள்வரையிலும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணை யத்திடமிருந்து எவ்வித தடையில்லா சான்றையும் ஈஷா பவுண்டேஷன் நிறுவனம் பெற்றிருக்கவில்லை என்று அரசு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய தணிக்கைத்துறை அறிக்கையின்படி, பூலுவாப்பட்டி கிராமத்தில் 300சதுர அடி பரப்புக்குமேல் வணிகக் கட்டடங்கள் அல்லது அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றபோது, அனைத்து வகையிலான வளர்ச்சித் திட்டங்களிலும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசிக்க வேண்டும் என்று 2003ஆம் மார்ச் மாதத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூலுவாப்பட்டி  கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பில் பல கட்டடங்களை 1994ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு வரை  ஈஷா பவுண் டேஷன் நிறுவனம் ஊராட்சியின் அனுமதிபெற்று கட்டி யுள்ளது. 69,193 சதுர அடி பரப்பில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு தடையில்லா சான்று அளிக் குமாறு 2011ஆம் ஆண்டு அக்டோபரில் வனத் துறையிடம் விண்ணப்பித்தது. மேலும், 52,393 சதுர அடி பரப்பில் கட்டடம் கட்டப்பட உள்ளதாகவும் அதற்கும் தடையில்லா சான்றளிக்க வேண்டும் என்றும், 3,34,331 சதுர அடி பரப்பில் வாகன நிறுத் தங்கள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பிறவற்றிற்கும் தடையில்லா சான்று அளிக்கவேண்டும் என்றும் நிறுவனத்தின் சார்பில் கோரப் பட்டுள்ளது.

மாவட்ட வனத்துறை அலுவலர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஊராட்சியின் ஒப்புதலைமட்டுமே பெற்று, 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 11,973 சதுர அடிப்பரப்பில் கட்டடங்களை ஈஷா நிறுவனம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கருத்தறியாமல் கட்டியுள்ளது என்பதை ஆய்வில் கண்டறிந்தார்.

2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூளுவாப்பட்டி கிராமத்தில் யானைகள் செல்லும் வழித்தடமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படக் கூடாது என்று அறிவிக்கை அனுப்பிய போதிலும், அதை மீறி கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடர்ச்சியாக நடந்துள்ளன.

2013ஆம் ஆண்டில் தடையில்லா சான்று வழங்கக்கோரும் விண்ணப்பத்தை நிராகரித்து, திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கட்டடங்கள் கட்டுவதைத் தடுக்கின்ற எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 100 மீட்டர் எல்லைக்குள் கட்டடங்கள் கட்டப்படக்கூடாது என்கிற நிலையில் தடையில்லா சான்று அளிக்க மறுக்கப்பட்டு வந்த நிலையில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா நிறுவனம் இடைக்காலத் தடையாணைக்காக வழக்கு தொடர்ந்துள்ளது.

உலகக் கலாச்சார விழா என்ற பெயரில் சிறீ சிறீ ரவிசங்கர் என்பவர் யமுனை நதிக் கரையைச் சீரழித்தது கொஞ்ச

நஞ்சமல்ல. பாலம் அமைக்க இந்திய இராணுவமே ஒத்துழைப்புத் தந்தது. பசுமையான யமுனை நதிக்கரை இந்தச் சீரழிவிலிருந்து மீள மேலும் 10 முதல் 50 ஆண்டுகள் வரை தேவைப்படும், மறுசீரமைக்க நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று சொல்லப்பட்டதே.

இது சாமியார் கார்ப்பரேட்டுகள் ஆட்சி  என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...