காயிதே மில்லத் காலத்திலிருந்து தமிழுக்கு மத்திய அரசின் ஆட்சி மொழித் தகுதிக்கான உரிமைப் போராட்டம் தொடர்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற இயக்கம் தி.மு.க. “எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி என்கிற தகுதியை உடனடியாக வழங்கவேண்டும்” என கலைஞர் பல முறை வலியுறுத்தியிருக்கிறார். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதுபோலவே, திருச்சி சிவா இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்து, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மத்திய அரசிலே பங்கேற்றிருந்த போதும், மாநில அளவிலான மொழிகளை இந்தியாவின் ஆட்சிமொழிகளாக்குவது அத்தனை எளிதாக நிறைவேறவில்லை. தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்தான், தமிழுக்கு இந்திய ஒன்றிய அரசு, செம்மொழித் தகுதியை வழங்கியது.
இடைவிடாத முயற்சிகளால் படிப்படியாகப் பெறுகின்ற வெற்றிகளின் வரிசையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் உரையாற்றவும், அவற்றை மொழிபெயர்க்கவுமான வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க. மட்டுமின்றி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சியினர் பலரும் தாய்மொழிக்குரிய தகுதிக்காக டெல்லியை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் சார்பில் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற குமரிஅனந்தன், 1978ஆம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி, நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதைத் தமிழிலேயே பேசி பதிவு செய்தார். பிரதமர் மொரார்ஜிதேசாய் அரசில் அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் தலைமையிலான மொழிக்குழுவிடமும் இதனை வலியுறுத்தினார். மணியார்டர் படிவத்தில் தமிழ் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வெற்றி பெற்றவர் குமரி அனந்தன்.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் கேள்வி எழுப்பவும் பதில் பெறவும் வாய்ப்பு அமையவேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகால தொடர் போராட்டத்தினால் நிறைவேறியிருக்கிறது. (இந்த வாய்ப்பு 5 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்தால், மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி தன் பதவிக்காலத்தின்போது நாடாளுமன்றத்தில் ஏதேனும் பேசியிருக்கக்கூடும்)
அரசியல்வாதிகள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என்று இலக்கிய மேதாவிகள் கேட்பது வழக்கம். தமிழுக்கு மட்டுமல்ல, தமிழுக்கான கோரிக்கை மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்குமான உரிமையை நிலைநாட்ட உணர்வும்-துணிவும் உள்ள அரசியல்வாதிகளால்தான் முடியும். இலக்கியவாதிகளின் அரசியல் கூத்துகளும் அரசியல்வாதிகளின் இலக்கிய முயற்சிகளும் பிரிக்க முடியாதவை.
திருவள்ளுவர் ஆண்டு 2049 ஆனி 29
Thursday, July 12, 2018
Govi Lenin
Subscribe to:
Post Comments (Atom)
கார்டூனிஸ்ட் பாலா
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...

-
தம்பி பிறந்து நான்கைந்து மாதங்களில், சிவகங்கை அரண்மனைக்கு எதிரான அரங்கில் கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், அப்பாவும், அம்மாவும் ...
-
தயவுசெய்து தற்கொலை செய்துகொள் நாங்கள் சமையலராக இருக்கிறோம் நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்... நாங்கள் மருத்துவராக இருக்கிறோம் ...
-
படத்தைப் பாருங்கள். மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்...
No comments:
Post a Comment