இது சத்தியமாக தனி நபர் தாக்குதல் இல்லை சமீபகாலமாக fun ஆக நினைத்து பெருகிவரும் ' குழந்தைகளை டீஸ் ' செய்யும் வீடியோஸ்தர்கள் மீதான எரிச்சலும், சுய பட்சாதாபமும்( என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது சுய பட்சாதாபம் தானே! )
சமீபத்தில் குழந்தையை பள்ளிக்கு இழுத்துச் செல்லும் வீடியோக்கள், கணக்கு சொல்லி கொடுக்கும் போது மிரட்டும் வீடியோக்கள் என குழந்தைகள் மிரள்வதை ' சிரிப்பு ஸ்மைலியுடன்' பல வாட்ஸப் ஷேர்களில் பார்க்க முடிகிறது.
பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் எல்லாம் உடல், மன அளவில் மெலியவர்கள் பட்டியலில் இருந்தார்கள் அதனால்தான் உடல் உழைப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்ட அன்றைய சமுதாய கட்டமைப்பில் இவர்களை காக்கும் பொறுப்பை எண்ணம், உடல் அளவில் வலிமையானவர்களாகப் பார்க்கப்பட்ட ஆண்களிடம் கொடுத்தார்கள்.
இன்று உடல் உழைப்பு தவிர்த்து வலிமை என்பது வெவ்வேறாக உருவாகி நிற்கின்றது. பகுத்தறிவு, டெக்னாலஜி என உலகத்தின் அச்சுறுத்தல் போர் முறைகளை மாற்றியிருக்கிறது. ஆண், பெண் நிலை மாறினாலும் எக்காலத்திலும் முதியோர் குழந்தைகள் மெலியவரகள் தான். இன்னும் கேட்டால் ஆரோக்கியம் குன்றிய இக்கால கட்டத்தில் அவர்கள் முன்பை விட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள்.
டீஸ் செய்கிறேன் என சக நண்பரிடம் கூட செய்ய முடியாத விளையாட்டையும், ஆதிக்கத்தையும் உங்களை மனதளவில் கூட எதிர்க்க முடியாத ஓர் குழந்தையிடம் நிகழ்த்தாதீர்கள். அப்படி ஓர் எண்ணம் மீண்டும் மீண்டும் வந்தால் உங்களுக்கு கவுன்சலிங் தேவைப்படும் மனநோய் உள்ளதாக நினைத்து மருத்துவர் துணை நாடுங்கள். மெலியவரை வதைப்பது என்பது மன நோய் மட்டுமே. Fun அல்ல.
டிஜிட்டல் இந்தியா எனச் சொல்லிக் கொள்ளும் ஆஃப் பாயில் உலகில் எந்த வீடியோ வெளி வந்தாலும் ஒன்று கிழிக்க இயலாது என்ற நிலை இருந்தால், வியூவிற்காகவும், லைக்குக்காகவும் சைக்கோவாகும் நிலை அதி விரைவில் உருவாகும்.
No comments:
Post a Comment