கடவுள்சிலைகள் கடத்தல்: சிபிஐ விசாரணை தேவை
பழநியின் ஒரிஜினல் நவபாஷண முருகன் சிலையை காசுக்காக
சுரண்டியதில் அது பழுதுபட்டது. சுரண்டல் வேலை கடவுளிடமே
காட்டப்பட்டது. இதைச் செய்தது கருவறைக்குள் நுழையும் உரிமை
உள்ளவர்களே. இப்போது புதிதாக செய்யப்பட்ட சிலையிலும்
மோசடி என்று முருகப் பெருமான் கும்பகோணம் கோர்ட்டுக்கு
கொண்டு போகப் பட்டிருக்கிறார். இதற்கிடையில் திருவண்ணா
மலையிலும் ஒரு முருகர் சிலையும் சூலாயுதமும் காணோம்
எனப்படுகிறது. (டிஒஐ ஏடு) சிலை கடத்தல் தடுப்பு போலிஸ்
அதிகாரியோ 7000 கடவுள் சிலைகள் கடத்தப்பட்டு போலி
சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்கிறார். அப்படியெனில் கரு
வறைக்குள் நுழையும் உரிமை உள்ளவர்களின் ஒத்துழைப்பின்றி
இது நடந்திருக்காது. இந்த கடத்தலில் ஒரு தேசிய கட்சியின்
தலைவர் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அப்படியெனில் இது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய
விஷயமன்றோ? ஏன் அரசு மெத்தனமாக உள்ளது? "உடனடியாக
உருப்படியான நடவடிக்கை எடுக்கா விட்டால் சிபிஐ விசாரணைக்கு
உத்தரவிட வேண்டியிருக்கும்" என்று தமிழக அரசை எச்சரித்திருக்
கிறது சென்னை உயர்நீதிமன்றம். எச்சரித்து பயனில்லை. தேசிய
கட்சி தலைவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றால் இபிஎஸ் அரசு
அசையாது. நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான்
உண்டு.
No comments:
Post a Comment