Saturday, August 18, 2018

Babu vmk

"கருத்துரிமை காத்த கலைஞர்" என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த புகழஞ்சலி கூட்டத்தில் பத்திரிகையாளர் சமஸ், தலைவர் கலைஞரை, கருணாநிதி என்று குறிப்பிட்டு பேசியது ஒரு பக்கம் இருக்கட்டும். அங்கு அவர் பேசிய மிக முக்கியமான உண்மை என்னவென்றால்.,
திராவிட இயக்கம் மீது, திமுக மீது மற்றும் கலைஞர் மீது புறக்கணிப்பு, நிராகரிப்பு, இருட்டடிப்பு வரலாற்று ரீதியாக தொடர்கின்றது. ஊடகங்கள் மற்றும் சமூகத்தில் திமுக மற்றும் கலைஞருக்கு எதிராக அரசியல் தீண்டாமை நிலவுகிறது. மாநில அளவில் மட்டுமல்ல இந்திய அளவில் நிலவுகிறது என்றார். இதைத்தான் திமுகவினர் நாம் இவ்வளவு நாள் இங்கு சொல்லி வந்தோம். இதை ஒரு பத்திரிகை ஊடகவியலாளரே மேடையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் சொன்ன வார்த்தைகள்...👇

இந்து பத்திரிகையின் தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்திற்காக இந்தியாவில் உள்ள முக்கியமான ஆளுமைகளை தொடர்பு கொண்டோம், அகில இந்திய பத்திரிகையாளர்களை, வரலாற்று ஆசிரியர்களை தொடர்பு கொண்டோம். பலர் கருணாநிதி என்ற பெயரை கேட்டதுமே என்னால் எழுத முடியாது என்றனர். பலர் கருணாநிதி பெயரையே தெரியாது என்றனர். சரி, திராவிட கட்சிகளின் 50 ஆண்டு பணிகளை பற்றி எழுதிக் கொடுங்கள் என்றோம். எங்களுக்கு அதுவும் தெரியாது என்றனர். திராவிட இயக்கத்தின் வரலாறு பற்றியாவது ஒரு பக்கத்திற்கு எழுதி கொடுங்கள் என்றோம். முடியாது என்றுவிட்டனர்.

சரி, அரசியல் ஆளுமைகளோ, பத்திரிக்கையாளர்களோ எழுத முடியாது என்று சொல்லக் கூடாதா..? என்றால் சொல்லலாம் அது அவர்களின் விருப்பம். ஆனால் 5 ஆண்டுகள் கூட ஆட்சியை முடிக்காத அர்விந்த் கெஜ்ரிவால் பற்றி மாதத்திற்கு 5 கட்டுரை எழுத முடியும் வல்லமை கொண்டவர்களால் ஒரு கட்சிக்கு 50 ஆண்டுகளாக தலைவராக இருந்த கலைஞர் பற்றி எழுத முடியாது என்று சொல்வது சாதாரண வார்த்தை இல்லை. அப்படி சொல்பவர்கள் தங்களை அகில இந்திய பத்திரிகையாளர், அகில இந்திய அரசியல் வரலாற்று ஆசிரியர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் எங்களால் எழுத முடியாது என்று சொன்னார்கள். அப்படி சொன்னதற்கு பின்னால் திட்டமிட்ட அரசியல் தீண்டாமை உள்ளது. அந்த தீண்டாமையை உடைப்பதற்கு தான் தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தை கொண்டு வந்தோம்.

இந்த அரசியல் தீண்டாமைக்கு பின்னால் அரசியல் விழிப்புணர்வு அற்ற, அரசியல் உணர்வற்ற தன்மை திட்டமிட்டு இந்த சமூகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களிடம், மாணவர்களிடம் பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம் பற்றி கேட்டால் எதைப்பற்றியும் தெரியாமல் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடிக்க கூடிய தன்மை எங்கிருந்து வந்ததென்றால், திட்டமிட்டு இந்த அரசியல் நீக்கம் நடைபெற்றதால் வந்தது.///

திமுக பற்றிய அத்தனை விஷயங்களுக்கும் இந்த அரசியல் தீண்டாமை தான் காரணம்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...