Friday, August 24, 2018

கவின்மலர்

டாக்டர் தொல்.திருமாவளவன்
**
ஜேப்பியர் பல்கலைக்கழகத்தில் தந்த பட்டமல்ல நண்பர்களே..
உழைத்து, ஆய்வு செய்து பெற்ற டாக்டர் பட்டம்

"மீனாட்சிபுரம் தலித் மக்கள் ஏன் இஸ்லாத்துக்கு மாறினார்கள்?" என்கிற தலைப்பில்தான் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

"இந்த ஆய்வின் நோக்கம், முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதல்ல; அந்த மதமாற்றச் சம்பவத்தின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்வதுதான். பகுதிநேர ஆய்வு மாணவராக இருந்ததால், கிட்டத்தட்ட 15 வருடங்கள் குற்றவியல் துறையின்கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.

அந்த மக்கள் மதம் மாறுவதன் மூலம், தங்கள் சொந்தங்களைப் பிரிகின்றனர்; அவர்களின் தலைமுறையினருக்குக் கிடைக்கும் இட ஒதுக்கீட்டை இழக்கின்றனர். இருந்தும் மதம் மாறும் அளவுக்கான காரணம் என்ன என்பதற்கு இந்த ஆய்வறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளேன். அந்த மக்களின் தற்போதைய வாழ்நிலை எப்படியுள்ளது என்பதையும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்" என்கிறார்.

வாழ்த்துகள் தோழர்!!!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...