வியக்க வைக்கிறார் விஜய மல்லையா! இந்திய அரசையே தனக்கு சேவகம் செய்ய வைத்து விட்டார்!
பிரிட்டிஸ் நீதி மன்றத்தில், இந்திய அரசு, என்ன சொல்லியிருக்க வேண்டும்?
”விஜய மல்லையா எங்கள் உச்ச நீதி மன்றத்தால் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப் பட்டவர்.சிறைச் சாலையில் போதிய வசதிகள் உள்ளன. அவருக்கு வசதிகள் கூடுதலாக தேவைப்பட்டால், அதை உரிய வகையில்
கேட்டுப் பெறும் ஜனனாயக உரிமையும் கொண்டதே இந்தியா!
ஆனால், ஒரு மிகப் பெரிய பொருளாதார குற்றவாளி,17 இந்திய வங்கிகளில் 9,600 கோடிக்கும் அதிகமான பணத்தை பெற்று , 2 ஆண்டுகளாக குற்றவுணர்வு சிறிதுமின்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படிப் பட்டவரை திருப்தி படுத்த ஒரு அரசாங்கம் இந்திய சிறைச்சாலையை வீடியோ எடுத்து பிரிட்டீஸ் நீதி மன்றத்தில் காட்ட கட்டளையிடுவது, இந்தியாவை இன்னும் பிரிட்டீஸ் ஒரு காலனியாதிக்க நாடாக கருதுகிறதோ..., தான் இந்தியாவை அடிமைப் படுத்திய கால கட்டத்தில் தங்களுக்கு விசுவாசமாக இருந்த குடும்பத்தை சேந்தவரை பாதுகாக்க பெரும் பிரயத்தனம் செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என பிரிட்டிஸ் நீதி மன்றத்தில் ஒங்கி பேசியிருக்க வேண்டும்.
’’ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவன்” என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்ட விஜய மல்லையா,மிக ஒழுக்க கேடான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, உலகின் 30 க்கு மேற்பட்ட நாடுகளிலும், இந்தியாவின் பல பாகங்களிலும் மிக பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீடுகளையும், சொத்துகளையும் வைத்திருந்தும், கிங் ஏர்லைன்சின் 7,000 ஊழியர்களின் 15 மாத சம்பளத்தை தராமல் ஏமாற்றியவர்.அப்போதே இவரை கைது செய்திருக்க வேண்டும். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்திருக்க வேண்டும்.
.அப்படி செய்யாமல் விட்டாதால் தான் இப்போது அவர், ,” பிரிட்டிஸ் எனது தாய் வீடு” என பேசி புளகாங்கிதம் கொள்ள முடிகிறது!.
இப்படிபட்ட பிரகிருதி தான்,முன்பு சுப்பிரமணியசாமி கட்சியின் தேசிய தலைவராக இருந்து, ஜனதா தளத்தை பிளந்தார்.ஒரு மிகப் பெரிய மதுபான தயாரிப்பாளரான இவரை எந்த சேவை செய்தார், என முதலில் காங்கிரஸிம்,பிறகு ப ஜ க வும் மாநிலங்களவை உறுப்பினராக, மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவோடு தெர்ந்தெடுத்தனரோ தெரியவில்லை!
10 ஆண்டுகாலம் இங்கு எம். பி யாக இருந்தவர், தனக்கு பிரிட்டிஸ் தான் தாய் வீடு என்பதோடு, இந்திய அரசாங்கத்தையே பிரிட்டிஸ் நீதிமன்றத்தில் அசிங்கப்படுத்துகிறார் என்றால்,இதற்கு இந்திய அரசும்
உடன்படுகிறது என்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அப்பட்டமான பொய்யாகாதா?
No comments:
Post a Comment