கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா அறிவாலயம் வந்தார் கலைஞர். அங்குள்ள கலைஞர் அரங்கில் கட்சி நிகழ்ச்சி. அரங்க வாசலில் இருந்த பேனரில் ‘கலைஞர்’ சிரித்தார். ஆனால், அதைப் பார்த்த கலைஞர் சிரிக்கவில்லை. காரைத் திருப்பச் சொல்லிவிட்டார். என்னவென்று தெரியாமல் நிர்வாகிகள் பதறினர்.
“அண்ணாவை அதற்குள்ளே மறந்துட்டீங்களா?” என்றார் கலைஞர் கோபமாக.
பேனரில் அண்ணா படம் இல்லை. அதுதான் கலைஞர் தனது காரைத் திருப்பக் காரணம். அண்ணா இறந்து ஏறத்தாழ 45 ஆண்டுகள் கழித்து வைக்கப்பட்ட பேனரைப் பார்த்து, அண்ணாவை மறந்துட்டீங்களா எனக் கேட்டவர் கலைஞர்.
அவர் இறந்து, 45 நாட்கள் கடந்திருக்குமா?
திருவள்ளுவர் ஆண்டு 2049 புரட்டாசி 3
No comments:
Post a Comment