Wednesday, September 19, 2018

அருணகிரி சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் வீட்டின் பின் அடுக்கில் கட்டிலில் படுத்துக்கொண்டு மேலே பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்படியே அலைபேசியில் ஒரு படம் எடுததேன்.
படத்தில் பார்ப்பது,
நடுவில் உள்ள தூணுக்குக் கீழ்புறம் மேலே உள்ள தேக்குமரங்கள்.

மற்றொரு பகுதி மேல்புறம் உள்ளது.

ராஜீவ் காந்தி கொலையின்போது
சுமார் 200 பேர் சூழ்ந்து கொண்டு
எங்கள் வீட்டைத் தாக்கினர்.
முன்புறம் உள்ள தேக்குக் கதவை உடைக்க
நீண்ட நேரம் ஆகி விட்டது.

தெருவில் உள்ள மின் கம்பத்தின் வழியாக சிலர் மேலே ஏறி
நடு வீட்டிற்குள் இறங்கி விட்டனர். அனைத்துப் பொருட்களையும் உடைத்து நொறுக்கினர்.

அங்கே என் தந்தை உட்கார்ந்து இருந்தார்.

எல்லோரும் அறிந்த முகம் என்பதால்,
அவரை அடிக்கவில்லை ஒன்றும் செய்யவில்லை.
ஆனால் அவரது கண் முன்பே
பீரோக்களை உடைத்து வேட்டி சேலைகளை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு தலையில் சுமந்து சென்றனர்.

அப்போது சிலர்,
இந்த மேற்கூரையைப் பார்த்து
இதைத் தீ வைத்து எரிக்க வேண்டும என்று சொல்லவும், சிலர் அதற்காக பெட்ரோல் வாங்கச் சென்றனர்.

இதற்குள் முக்கால் மணி நேரம் ஆகி விட்டதால்,
தெருக்காரர்கள் பலரும் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்து,
காவல்துறையினர் பெருமளவில் வந்து விட்டனர்.

தாக்கியவர்கள் ஓடி விட்டனர்.

சிறிது நேரம் தாமதித்து இருந்தாலும்,
ஒட்டுமொத்த வீட்டையும் எரித்து இருப்பார்கள்.

அப்படித்தான் புளியங்குடி பழனிச்சாமி வீட்டை
முழுவதும் எரித்து விட்டார்கள்.

எப்படியோ அன்று எரியாமல் தப்பிய மரங்கள்தான் இவை. .

இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் சேதம், இழப்பு.

அரசு கொடுத்த உதவித் தொகை 25000 ரூபாய்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...