பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமன் நாயர் என்பவர் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்புக்கு முன் ஆஸ்திகர்களுக்கும் நீதிபதிக்கும் விவாதம் நடக்கிறது.
"பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?" என்று நீதிபதி கேள்வி எழுப்புகிறார்.
"நாங்கள் நம்பும் கடவுளின் கற்பனை உருவம் எவ்வாறாயினும் அது எங்கள் இந்து மக்களின் நம்பிக்கை. அந்த கற்பனை உருவத்தை அவமதிப்பதும் உடைப்பதும் எங்கள் மனதை புண்படுத்துகின்றது என்கிறார்கள் வழக்கு தொடுத்த ஆத்திகர்கள்."
இப்போது நீதிபதி ராமன் நாயர் கூறுகிறார்:
அவர்கள் பிள்ளையாரை திடீரென உடைக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக பிள்ளையார் குறித்து பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். பிள்ளையார் சிலைகள் செய்து அதை உடைக்கப் போகிறோம் என்று தேதியும் அறிவித்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கண்டித்துவிட்டு பெரியார் பிள்ளையார் சிலை உடைத்த வழக்கை தள்ளுபடி செய்கிறார்.
இதன் தொடர்ச்சியாக பத்திரிகையார்கள் பெரியாரிடம் எதற்காக பிள்ளையார் சிலையை உடைத்தீர்கள். அதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்ப பெரியார் கூறுகிறார்:
"கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்ததால் கடவுளை உடைத்ததாக ஆகாது. பிள்ளையார் பிறப்பு குறித்த பார்ப்பனர்களின் ஆபாசக் கதைகளைத்தான் கண்டித்தோம்.
நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஒப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே!
சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான்; அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெத்துக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வதும் என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும் தான் அவர்களால் செய்ய முடிந்தது! சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண்டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன்தானே புதிய சாமிகளையும் உண்டாக்குவான்! இதுவரையிலே சாமி கும்பிடாதவன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டிருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள், தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?" என பதில் அளிக்கிறார்.
பிள்ளையார் சிலை உடைப்பு அதன் அரசியல் என்ன? அதனுல் புதைந்துள்ள பிள்ளையார் பிறப்பு ஆபாசக் கதைகள் என்ன? அது அறிவிற்கு பொருத்தமானதா? இந்த கற்பனை / ஆபாசக் கதைகளை எப்படி அறிவியலுக்கு மாறான பிறப்பை கொண்டாட முடியும்? அப்படி நாம் கொண்டித்ததான் தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் யாரால் உருவாக்கப்படுகிறது? அதற்கான நோக்கம் என்ன என்பதை விவாதிக்க முற்படுபவர்களோடு நமக்கு முரண்பாடுகள் இல்லை. ஆனால் மக்களை ஒட்டு மொத்த முட்டாள் கூட்டங்களாகவே இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் ஆன்மீகவாதிகள் வெறும் வசவுச் சொற்களை கொண்டு இணையத்தில் கூப்பாடு போடுவதற்கு இந்த இடம் பஜனை மடமல்ல; பழைய பஞ்சாங்கம் படிப்பவர்களுக்கும் அறிவியல் தளம் ஏற்றதல்ல என்பதையும் உணர்த்தவே...
"பிள்ளையார் பிறப்பு முட்டாள்தனமான பார்ப்பனர்களின் வயிற்று பிழைப்புக்கு உருவாக்கப்பட்ட கற்பனை கதை என்று பெரியார் தொண்டர்கள் இணையத்தளங்களிலும் பகுத்தறிவு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம்!
No comments:
Post a Comment