Thursday, September 13, 2018

மா. உமாபதி

--------------------: சர்க்காரியா கமிஷன் -------------------------

சர்க்காரியா கமிஷன் எமர்ஜென்சி காலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சி மீதான சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் எதையுமே நிரூபிக்கப்படவில்லை. அதன் தீர்ப்பு வந்த காலத்தில் எம்ஜிஆர் ஆட்சிதான் நடைபெற்றது. 12 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆண்ட அவர் திமுக ஊழல் செய்திருந்தால் ஏன் ஒரு வழக்கு கூட தொடுக்கவில்லை?   ஜெயலலிதா ஆட்சி செய்த 16 ஆண்டுகளிலும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. ஏனென்றால் அவை அத்தனையும் உண்மைக் கலப்பே  இல்லாத வடிகட்டிய  பொய்கள்.
.
உதாரணத்துக்கு கோபாலபுரம் இல்லம். 1955இல் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே வாங்கப்பட்டது. MGR  அது வாங்கப்பட்ட காலம் முதல் அந்த வீட்டுக்கு நூற்றுக்கணக்கான முறை வந்து சென்றிருக்கிறார். அது ஒரு சாதாரண தெரு வீடு.  அதை திமுக ஆட்சியைப் பயன்படுத்தி வாங்கியது என்றும், அதனை தங்கத்தாலும் , வைர வைடூரியங்களாலும் இழைத்து செதுக்கி கட்டியதாகவும் மனசாட்சியை விற்று விட்டு எம்ஜிஆர் புகார் கூறினார். 0.00001% கூட உண்மையில்லாத புகார்.

இதுபோலவே, சென்னை, அண்ணாசாலையில் , தேவி திரை அரங்குஅருகில் இருந்த அண்ணாதிரை அரங்கு கலைஞருக்கு சொந்தமானது என்றொரு குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு. இவை போலத்தான் ஒவ்வொரு குற்றச்சாட்டும்

1971 தேர்தலில் வாக்குகள் பதிவாகி ஓட்டுகள் எண்ணப்படும் முன், ராஜாஜி, காமராசரின் மெகா கூட்டணி தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில்  தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ராயப்பா அவர்களும், ஐஜி அருள் அவர்களும் காமராசருக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.. ஆனால் மக்கள் தீர்ப்பு வேறுவிதமாக இருந்தது. திமுக பெரும் வெற்றி கண்டது.காங்கிரஸ் படுதோல்வி பெற்றது. தலைமை செயலாளர் ராயப்பா வேறு கருத்து கொண்டவராக இருந்ததால் அவருக்கு தலைமை செயலாளர் பதவிக்கு பதிலாக மாற்று பதவி அளிக்கப்பட்டது. அவர் தனக்கு தலைமை செயலாளர் பதவி வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.அங்கு அவரை அரசு கொடுக்கும் பதவியில் பணியாற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த ராயப்பா திமுக ஆட்சி மீது கடும்கோபத்தில் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை சர்காரியா கமிஷனில் சாட்சி சொல்ல அழைத்தார்கள். அவர்  பணி ஓய்வுக்குப் பின் திருவண்ணாமலையில் தனது  பண்ணை வீட்டில் இருந்தார்  அப்போது அவர் "நான் பதவி வகித்த காலத்தில் என்னிடம் வந்த கோப்புகளில் எனது கருத்துக்களை எழுத்துபூர்வமாக தெரிவித்து உள்ளேன். தேவையெனில் நீங்களே அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள். அதைத்தவிர வேறு சாட்சி சொல்ல என்னை அழைக்காதீர்கள், என்னிடம் எதுவும் இல்லை"..என்று சொல்லி விட்டார். அவருக்கு பலவிதங்களிலும் ஆசை காட்டப்பட்டது, அச்சுறுத்தவும் பட்டார். அவர் எதற்கும் மசியவில்லை.இப்படி, ஆட்சி, அதிகாரம், பணம், பதவி இவற்றைப் பயன்படுத்தி பல வகைகளில் முயன்று அத்தனையிலும் தோற்றார்கள்.  .

சர்க்காரியா கமிஷனை திமுக ஆண்மையுடன் எதிர்கொண்டது. புகார் கூறிய  எம்ஜிஆர் , இந்திய கம்யூனிஸ்ட் கலியாணசுந்தரம் போன்றவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர்கள் சாந்திபூஷண், இலங்கை ஜி.ஜி .பொன்னம்பலம் போன்றவர்கள் கோரியபோது நீதிபதி  சர்க்காரியா "அது தேவை இல்லை"  என்று சொன்னதால் திமுக வழக்கறிஞர்கள் இனி நாங்கள் வாதாடுவதில் பலன் இல்லை என்று வெளியேறினர். புகார் கூறியவர்களை விசாரிக்கக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?   அதன் பின்னரும் "ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய கதையாக"  சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னரும் கூட எதுவும் நிரூபிக்கப்படவில்லை., ஒரு வழக்கும் பதிவாகவில்லை.

ஆக, சர்க்காரியா கமிஷன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் தொகுப்பு.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...