"தி.மு.க பா.ஜ.க ரகசிய உறவு ! " என்கிற கருத்து வேகமாக பரப்பப்படுகிறது. அ.தி.மு.க அதிகாரப்பூர்வ நாளேட்டின் இன்றைய பா.ஜ.க எதிர்ப்புக்கவிதை மற்றும் ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு காட்டும் அக்கறை , எடப்பாடியை ஒரு ராஜதந்திர அரசியல்வாதியாக காட்ட முயல்கிறது.
" விமானத்தில் கூட குழாய்யடி சண்டை " என முடியும் அக்கவிதை , தமிழிசைக்கு எதிராகவும், சோஃபியாவுக்கு ஆதரவாகவும் முடிகிறது. அ.தி.மு.கவுக்கு இத்தனை தைரியமா? என அரசியல் விமர்சகர்களை வியக்க வைக்கிறது அக்கவிதை.
" நமது எம்.ஜி.ஆர் " நாளிதழில் பா.ஜ.கவை எதிர்த்து இதுபோன்ற கவிதை வெளியானபோது , அதன் ஆசிரியர் மருது நீக்கப்படுகிறார். யாரால் ....தினகனரனால் ! இன்று பா.ஜ.க அடிமையாக வருணிக்கப்படும் அ.தி.மு.க அரசின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துக் கவிதை !
ஆனால், திராவிட இயக்கத்தின் ஆணி வேராக தங்களைக் கருதிக்கொள்ளும் தி.க மற்றும் தி.மு.க ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாள்களாக செய்யும் கீழ்தரமான அரசியல் வெட்கித்தலை குனிய வைக்கிறது.
ஏழு தமிழர் விடுதலையை, விடுதலைப்புலிகள் இயக்கத்தை கொச்சைப்படுத்தி அவர்கள் வெளியிடும் கருத்துக்களின் நோக்கம் ஒன்றுதான். மு.க.ஸ்டாலின் முதல்வராகக்கூடாது. தி.மு.க வெல்ல வேண்டிய கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது , இதே போன்றக்கருத்துகளை பரப்பி தி.மு.கவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தது ஒரு கூட்டம். அதே கூட்டம் தற்போது களமிறக்கப்பட்டுள்ளது. திராவிடர் என்றப்போர்வையில், தமிழை தாய் மொழியாக கிட்டாத ஒருக் கூட்டம் மிகத் தீவிரமாக ஏழு தமிழர் விடுதலையை எதிர்க்கிறது. தி.மு.க , தி.க ஆதரவுப் போர்வையில்.
தமிழர்களாகிய எங்களை மானத்துடன் வாழ வைத்தவர் தந்தை பெரியார். வீரத்துடன் வாழ வைத்தவர் அண்ணன் பிரபாகரன்.
திராவிட தமிழ்த்தேசிய அரசியலை தெளிவாகப்படித்த கோடிக்கணக்கான தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரியும், யார் தமிழ் நாட்டை அடுத்து ஆள வேண்டும் என்று.
ஏழு தமிழர்கள் விடுதலையைக் கொச்சைப்படுத்தி, மீண்டும் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் நிறுவ நினைக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை. தயவுசெய்து உங்கள் தாய் மாநிலமான கர்நாடகா , ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு ஓடிவிடுங்கள். இல்லையேல் விரட்டப்படுவீர்கள்....எச்சரிக்கை!
- எழில்
No comments:
Post a Comment