Wednesday, September 19, 2018

தாகம் செங்குட்டுவன்

மோதும் போது துளி
விழும் போது கீறல்
முகத்தில் அறையும்போது சாரல்
தொடக்கத்தின் பெயர் தூறல்
நிறைந்தால் குளம்
நடந்தால் ஏரி
விழுந்தால் அருவி
பாய்ந்தால் வெள்ளம்
அடித்தால் அலை
வெடித்தால் ஆழி
குடித்தால் நீர்
வழிந்தால் கண்ணீர்
குடை மீது பிழை
பொதுப் பெயர் மழை
அவள் மீது விழும்போது மட்டும் ...
கவிதை  !!

- தாகம் செங்குட்டுவன்
( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ? தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...