கடந்த வாரம்.... சபரிமலையில் பெண்கள் நுழைவுப்போராட்டம் குறித்து நடிகர் சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, " யோவ் யோவ் " என்று அவர்களிடம் எகிறினார்.
தற்போது, ஒரு பொது விழாவில் அவரை செல்பி மூலம் படம் எடுத்த ஓர் இளைஞரின் கைபேசியை ஆக்ரோஷமாக தட்டி உள்ளார். கைபேசி கீழே விழுந்து நொறுங்கி உள்ளது.
தினம்தோறும் ஆன்மீகம், யோகா , ஹிந்து மதம் , பெரியோரை மதித்தல் போன்ற போதனைகளையும் , சில நேரங்களில் ' ஆணுறை மற்றும் உடற் சூடு " வேதனைகளையும் அள்ளி வழங்கி வருகிறார் அண்ணன் சிவகுமார்.
"யோகக்கலை பயின்ற நீங்களே இப்படி டென்ஷனாகலாமாண்ணே ? செல்பி கலாச்சார சீரழிவு என்றால் , நம் கலாச்சாரத்தை வளர்க்க உங்கள் மகன் ஞானவேல் ராஜா, ' இருட்டு அறையில் முரட்டுக் குத்து ' படத்தை வெளியிட்டபோது , அவர் கன்னத்தில் நீங்கள் ஒரு குத்து விட்டிருக்கலாமே ?
- தாகம் இதழுக்காக...சரவணன். க
No comments:
Post a Comment