Tuesday, October 30, 2018

ஆழி செந்தில்நாதன்

படத்தைப் பாருங்கள்.

மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கையென்றால்,  சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.

தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது "ஸ்டேட்டுக்கே ஒப்பி .யூனிட்டி" என்று ஆகியிருக்கிறது!

(அரபி, உருது படிக்கமுடியவில்லை)

பாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட "ஒற்றுமை சிலை" என்று சரியாக வருகிறது.

சரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்!
பாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி!

இந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).

ஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் "ஆட்சி" மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.

இந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்!

(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோடு சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் "ராஷ்ட்டிரபாஷா"வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை!. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!)

1 comment:

  1. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரிகளை குறைப்போம்
    - அருண்ஜெட்லி, நிதிமந்திரி.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
    சிலிண்டர்,பெட்ரோல் விலை 50% குறைப்போம்
    - மோடி .பிரதம மந்திரி.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
    ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை குறைக்கப்படும்
    - பியுஸ் கோயல்- ரயில்வே மந்திரி.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
    உள்நாட்டு,வெளிநாட்டு,மற்றும் பெண்கள் பாதுகாப்பு மேம்படும்,பசுக்கள் பாதுகாக்கபடும்
    -ராஜ்நாத் - உள்துறை மந்திரி.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
    வருடம் 2 கோடி வேலைவாய்ப்புகள்- பிரதமர்

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
    100 smart city 16 AIMS கல்லூரி கட்டுவோம்.- பிரதமரு
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கங்கையை சுத்தமாகுவோம்
    - மத்திய நீர்வளமந்திரி.

    ஒவ்வொரு குடிமகனும் உலகநாடுகளை சுற்றிவர
    வங்கிகணக்கில் 36 லட்சம் டெபாசிட் செய்யபடும்.
    - பிரதமர்.


    அப்பாவி மக்கள்: டேய் யாருடா இவுங்களாம் ஜோரா வாக்குறுதி கொடுக்குறாங்க.

    சொன்னானுங்களே
    போனவட்டம் சொன்னானுங்களே

    நான்: அட பாவி மக்கா
    இவுங்கதான் அவுங்க.. இவுங்கோதான் அஞ்சு வருசமா நம்ம ஆண்ட அமைச்சர் பெருமக்கள்.

    மக்கள்: அப்பால இவ்வுளவு நாளா இவனுங்க புடுங்குனதுலாம் தேவயில்லாத ஆணியா??

    நான்; இல்ல நேரு ஏதோ தப்பு பண்ணிட்டு போயிட்டாராம்..
    அத சரி பண்ண 5வருசம் ஆனா
    அதான் இன்ன ஒரு பத்துவருசம் கேக்காக

    மக்கள்:கிழுஞ்சுறும் அத்தோட
    மொத்த நாட்டயும் சுடுகாடா ஆக்கவா...

    ReplyDelete

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...