மீ டூ... ஒரு பாலியல் தொழிலாளியின் பாய்ண்ட் ஆஃப் வியூவிலிருந்தும்கூட விவாதிக்கப்படவேண்டும். ஆண் - பெண் - திருநங்கைகள் என அனைத்து பாலினமும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டாலும் மிக அதிகமாக ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளாவதும் பெண்கள்தான்.
'கரும்பு தின்ன கூலி' என்றபடி பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண் பாலியல் தொழிலாளர்களைப்போல... எந்தப்பெண் பாலியல் தொழிலாளரும் மகிழ்ச்சியுடன் கடந்து செல்வதில்லை. காரணம், பாலியல் தொழில் பெண்களுக்கு சுகம் அல்ல; மரண வலி கொண்டது.
பாலியல் தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் ஆண்கள் மட்டுமே பாலியல் தொழிலாளிகளை தேடிவருவதில்லை. பெண்ணை துன்புறுத்தி இன்பம் காணும் பாலியல் வக்கிரம் நிறைந்த கொடூர சைகோக்கள், மனநோய், உடல்நோய், குடிநோய் என கொடூர நோயாளிகளும்தான் பெரும்பாலும் வருகிறார்கள். அப்படியென்றால், பாலியல் தொழிலில் ஈடுப்படக்கூடிய எந்த பெண்ணும் முழு மனதுடன் ஈடுபடுவதில்லை.
பொதுப்பெண்களுக்கு இருக்கும் அத்தனை சட்டரீதியான உரிமைகளும் பாலியல் தொழிலாளிகளுக்கும் உண்டு. பாலியல் தொழிலாளிகள்தானே என்பதற்காக யாரும் மீ டூவில் ஈடுபட்டுவிடமுடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தன்னிடம் வந்தவன்கள் பணம் கொடுத்துவிட்டு துன்புறுத்திச்செல்வதால் அந்தப் பெண் புகார் கொடுக்காததால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், இப்போது வந்து மீ டூ பதிவிட்டாலும் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும்.
ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாலும் பாலியல் தொழிலாளியை அரசு காப்பகச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும் துன்புறுத்தியவன்களை விட்டுவடுதும்தான் சட்டம்.
No comments:
Post a Comment