தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை :
மேகேதாட் அணைப் பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் இல்லத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.முன்னால் பிரதமர் எச்.டி.தேவகவுடா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனந்தகுமார் ஹெக்டே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்சுன கார்கே உட்பட மக்களவை மேலவை உறுப்பினர்கள் உட்பட 33 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
கர்நாடகத்தில் நிலம் நீர் மொழி பிரச்சனைகளில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுபட்டு நின்று செயல்படவேண்டும் என்ற அடிப்படையில் மேகேதாட்டு பிரச்சனையிலும் ஒன்றுபட்டு செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் மாநிலப் பற்றின்றி அனைத்து மாநிலங்களும் பொதுவாக செயல்பட வேண்டியவர்கள். இதை மீறும் வகையில் மத்திய அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக ஒரு கூட்டம் கூட்டியதையும் அதில் மத்திய அமைச்சர்கள் பலர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்களை பிரதமர் கண்டிக்க வேண்டும். இல்லையேல் மத்திய அரசே தமிழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறது என தமிழர்கள் கருதும் நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அகில இந்திய கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தங்களின் கட்சிகளிளைச் சேர்ந்த அமைச்சர்கள் தலைவர்கள் போன்றோரை கண்டிக்க முன்வர வேண்டும்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்
No comments:
Post a Comment