திண்டுக்கல் ஐ.லியோனி....இன்று தி.மு.கவின் முக்கியப்பேச்சாளராக இருக்கலாம் . அவரது முதல் சென்னை நிகழ்ச்சி, ராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. நடத்தியவர் மாணவர் நகலகம் நிறுவனர் , தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் தலைவர், தமிழ்சான்றோர் பேரவையின் நிறுவனர் அய்யா நா. அருணாசலம் அவர்கள். திண்டுக்கல் லியோனியை பரிந்துரை செய்தவர் , அப்போதைய மாணவர் நகலக நிர்வாகிகளில் ஒருவரான , தேவநேயன் !
காலை ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி. அது 1996 ஆம் ஆண்டு. இதுபோன்ற நிகழ்ச்சிக்கு இடம் தர முடியாது என்று ராணி சீதை மன்ற நிர்வாகி மறுக்க, நான் கடுமையாகப் போராடி அரங்கத்தைப் பதிவு செய்தேன்.
இப்போது நடைபெறும் திராவிட- தமிழ்த்தேசியப் போர் அப்போது உச்சம். நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுக்க, அறிஞர் குணா தலைமையில் ஓர் அணி செயலாற்றியது. தந்தை பெரியார் குறித்து இழிவான துண்டறிக்கை ஒன்றினை அவர்கள் அரங்கத்தில் கொடுக்க, கைகலப்பு கலவரம் வெடித்தது. நான் , தேவநேயன் , பொம்மலாட்ட கலைஞர் கலைவாணன் , தோழர் ஓ.சுந்தரம் கடுமையாக களமாடி குணா ஆட்களை விரட்டி அடித்தோம்.
திண்டுக்கல் லியோனி நிகழ்ச்சி இனிதே அரங்கேறியது.
எத்தனை தி.மு.க நண்பர்களுக்கு இந்த வரலாற்று நிகழ்வு தெரியும்?
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? தொகுப்பிலிருந்து )
No comments:
Post a Comment