1992 ஆம் ஆண்டு 'தாகம் ' இதழைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை கடந்த 28 ஆண்டுகளில் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நடிகர்களை சந்தித்து இருக்கிறேன். நேர் காணல் செய்திருக்கிறேன். 1992 ஆம் ஆண்டே , கோபாலபுரம் இல்லத்தில் நான் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நேர்காணல் கேட்டபோது , அவர் சொன்ன பதில், " நான் பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதில்லை ! "
2006 க்கு பிறகு , நான் கலைஞரை சந்திக்க அறிவாலயம் சென்றபோது, வழியில் இடை மறித்தார் , என் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவைத்தலைவர் காட்டூர் சம்பத். தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான காட்டூர் சம்பத் மகன் அவர்.
" தலைவர பாக்க வத்தியா ? "
" ஆமாண்ணே "
" தளபதிய பாத்துட்டுப் போ "
" சரி . பார்க்கிறேன் "
தளபதியிடம் என்னை அறிமுகம் செய்கிறார் சம்பத்.
" விடாப்பிடியா தாகம் பத்திரிகைய நடத்துறான். நம்ம தம்பி. தலைவர் வரச்சொன்னாராம் "
தளபதி : " வணக்கம். என்ன விஷயமா தலைவர பாக்க வந்தீங்க ? "
நான் : " ஒண்ணுமில்லண்ணே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு. கனிமொழிகிட்ட கேட்டேன். பாக்கச்சொன்னார் "
தளபதி : " நான் என்ன செய்யனும். கூச்சப்படாம கேளுங்க "
நான்: " 1992 ஆம் ஆண்டு நாங்க கல்லூரி மாணவர் எல்லாம் நேந்து தாகம் பத்திரிகை ஆரமிச்சபோது உங்களை ஒரு நேர்காணல் கேட்டோம். நீங்க தரவே இல்ல "
தளபதி: " இப்ப என்ன உதவி வேணும். தயக்கப்படாம கேளுங்க "
நான் : " எதுவும் வேணாம்ணே. தலைவர பாத்தா போதும் "
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ" ....தொகுப்பிலிருந்து )
No comments:
Post a Comment