புலியுடன் புலி
நேற்று காலை மும்பை ஆளுநர் மாளிகையில் தலைவர் வைகோ அவர்களின் நீண்ட நாள் நண்பரும்
மராட்டிய மாநில ஆளுநருமான மாண்புமிகு வித்யாசாகர் ராவ் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது,
வரவேற்பு அறையில்
நான் எடுத்த படம் இது.
நாடாளுமன்றத்தில் புயலாகச் சுழன்ற காலங்களில்,
சுதாங்கன் அவர்கள் முதன்முறையாக, 1980 களின் தொடக்கத்தில் சுதாங்கன் அவர்கள் ஜூனியர் விகடன் ஏட்டில் Parliament Tiger நாடாளுமன்றப் புலி எனத் தலைவரை விளித்து எழுதினார்.
அதன்பிறகு,
நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடத்தில் கையில் சிறுத்தைக் குட்டியைத் தூக்கி வைத்துக் கொண்டு தலைவர் வைகோ அவர்கள் எடுத்துககொண்ட படம்,
அந்தக் காலகட்டத்தில்
தமிழகம் முழுமையும் தி.மு.கழகத் தொண்டர்களின் இல்லங்களின் வரவேற்பு அறைகளில் இடம் பிடித்தது.
கடந்த மாதம் மாதவரத்தில் இருந்து ஒரு தம்பி பேசினார்.
ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கின்றார்.
இந்தப் படத்தைக் குறிப்பிட்டு,
அது எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் இருக்கின்றது.
எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் நாள்தோறும் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
அவரைத் தவிர வேறு எவரையும் என்னால் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அவருக்கு வயது இருபதுதான்.
அதன்பிறகு,
ஈழத்தின் வன்னிக்காடுகளில்,
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வளர்த்த இரண்டு சிறுத்தைக் குட்டிகளுடன் தலைவர் நிற்கின்ற படமும் உலகப் புகழ் பெற்றது.
உலகத் தமிழர்களின் உள்ளங்களின் ஆழப் பதிந்த படம்.
1994 கோவை மாவட்டச் சுற்றுப்பயணங்களின்போது செல்வராஜ் (ஊர்ப் பெயர் உடனே நினைவுக்கு வரவில்லை)
அவர்களுடைய மாளிகை போன்ற வீட்டின் வரவேற்பு அறையில் உள்ள புலியுடன் தலைவரை நிற்க வைத்துப் படம் எடுத்தேன், என்னிடம் உள்ளது.
அடிமைப் பெண் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர்.வளர்த்த சிங்கத்தின் உருவம்,
தியாகராய நகர் எம்ஜிஆர் வீட்டில் இருக்கின்றது. அங்கேயும் படம் எடுத்து இருக்கின்றேன்.
சாஞ்சிப் படையெடுப்பின்போது,
நாக்பூரில் எங்களை வரவேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜய் பாட்டீல் அவர்களுடைய வீட்டில் புலியுடன் தலைவரைப் படம் எடுத்தேன்.
இதுபோலப் பல படங்கள் இருந்தாலும்,
தலைவருக்கு மிகவும் பிடித்தமான படமாக இது அமைந்து விட்டது.
இதைப் பெரிதாக்கி கலிங்கப்பட்டி வீட்டில் வை என்றார்.
(படத்தில் சிவப்புக் கம்பளம் லேசாகத் தெரிகின்றது. ஆனால், அலைபேசியைத் தொட்டால் படத்தை மேலும் விரிவாகப் பார்க்கலாம்.)
No comments:
Post a Comment