Payment கொடுத்தாத்தான் பெருமாள் சிலைக்காக வீடுகள்/கடைகளை இடிக்க அனுமதிப்போம் என்றதும் பொதுமக்கள் தான். பாரம் தாங்காமல் டயர் வெடித்து பாதிவழியில் நின்ற பெருமாள் சிலைக்கு குடம் குடமாய் மஞ்சள் தண்ணி ஊற்றி பக்தியோடு கும்பிட்டதும் அதே பொதுமக்கள் தான்.
பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டதாக கூறி அவரது பேருருவை மாடுக்கறி தின்றவன் கண்டுபிடித்த தார்பாலின் ஷீட் போட்டு மூடி மறைத்ததும் பெருமாள் கோவில்நிர்வாகம் தான். பெருமாளை கொண்டுபோகும் வாகனத்தின் டயர் வெடித்ததும் வேதவிற்பன்னர்களைக்கொண்டு “தேவபாஷை”யில் யாகம் நடத்தி அந்த டயரை சரிசெய்யாமல் சமஸ்கிரதம் தெரியாத சூத்திர mechanicகைகொண்டு அந்த வாகன டயரை சரிசெய்து பெருமாளை நகரச்செய்ததும் அதே கோவில் பெருமாள் நிர்வாகம் தான்.
ஆக பக்தி வியாபாரத்தில் கடவுளை மூலதனமாக போடும் முதலாளி வர்க்கமும் தெளிவாகவே இருக்கிறது. அதன் வாடிக்கையாளர்களாக இருந்து வழிபாடு செய்து பக்தி வர்த்தகம் விரிவடைய உதவும் பக்தகோடிகளின் கூட்டமும் தெளிவாகவே இருக்கிறது.
தத்தம் தேவை என்ன என்பதிலும் அதற்கு விலையை நிர்ணயிக்கலாம் என்பதிலும் அதற்கு என்ன விலை கொடுக்கலாம் என்பதிலும் விஞ்ஞானத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதிலும் இருதரப்பும் மிகவும் தெளிவாகவே இருக்கின்றன.
ஒருபக்கம் பக்தி முதலாளிகள் தம் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும் மேலும் மேலும் சொத்துக்களை வாங்கிக்குவிக்கவும் புதியபுதிய உத்திகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
மறுபக்கம் அதற்குத்துணைபோகும் பக்தகோடிகளும் தாம் சேர்த்துவைத்த சொந்த சொத்துக்கு சேதாரம் வராதவரை பக்திப்பழமாகத்தான் இருக்கிறார்கள்.
ஆக சொத்து சேர்க்கவும் சேர்த்த சொத்துக்கு சேதாரம் வந்தாலும் ஆனான பெருமாளே ஆனாலும் கைல காசு வாயில தோசைதான் என்பதில் இருதரப்பும் தெளிவாகவே இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment