அதிர வைக்கும் இந்த புகைப்படம் இன்றைய தினமணியில் வெளியாகியுள்ளது.60 ஆண்டுகளாக அரசியலில் கோலோச்சி வந்த பா ஜ க வின் முதுபெருந்தலைவர் அத்வானி கையெடுத்து கும்பிடுகிறார்.மோடி தானும் பதிலுக்கு வணங்காமல் தன் கைகளை பின்புறம் அழுத்தமாக பிடித்துக் கொண்டு நிற்கிறார்.
வாஜ்பாய் நினைவாக நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பேசும் நிகழ்வில் தான் அத்வானிக்கு அந்த அவமானம்! இந்த நிகழ்ச்சியில் வாஜ்பாயை ஒரு மிகப் பெரிய ஜனநாயகவாதி என மோடி புகழ்ந்து தள்ளியதை படித்த போது.. எனக்கு பழைய சம்பவங்கள் பல ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்து தொலைந்தது..!என் செய்ய?இதையெல்லாம் மறந்தவனாக மோடி பேச்சை மெச்சி, உச்சி முகர முடியவில்லையே...!
குஜராத்தில் கொடூர வன்முறைகள் அரங்கேறிய போது,அதை ஏற்க முடியாதவராக வாஜ்பாய் வெளிபட்ட போது,மோடி ஆதரவாளர்கள் கட்சிக்குள் வாஜ்பாய் மீது பாய்ந்து குதறியதை மறக்க முடியுமா?வாஜ்பாயின் மென்மையான அணுகுமுறை ஆர் எஸ் எஸ் சை அக்கினியாக பேச வைத்ததையும்,
வி ஹெச் பி, வாஜ்பாயை வறுத்து எடுத்ததையும், சிவசேனா சீறிபாய்ந்ததையும்
,எல்லாவற்றுக்கும் மேல் பஜ்ரங்தள் ‘’குஜராதை நாடு முழுவதும் நடத்திக் காட்ட முடியும்...வாஜ்பாய் அரசு தான் வழிவிட மறுக்கிறது.’’என்றதையும்..
.இப்படியாக இந்துத்துவாதிகளின் கோபத்திற்கு இலக்கான வாஜ்பாய்க்கு ஒரளவு அனுசரணையாக இருந்தவர் தான் அன்றைய துணை பிரதமர் அத்வானி...! அதீத இந்துத்துவ போக்குகள் ஆட்சி பீடத்திற்கே ஆபத்தாக முடியக் கூடும் என்று கூட நடைமுறை சார்ந்து அத்வானி வாஜ்பாயோடு ஒத்துப் போயிருக்கவும் கூடும்...!
ஆனால்,மறக்க முடியுமா...மோடியால்! மறக்க முடியாதன் நிலை தானோ இந்த அணுகுமுறை...!
No comments:
Post a Comment