Monday, January 7, 2019

வழக்கறிஞர் சுந்தரராஜன்

இதுவரை ஏழை, எளிய, பாமர மக்களை மட்டும் ஏமாற்றி வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு 'அறிவுசார் வகுப்பா'க நம்பப்படும் முற்பட்ட வகுப்பினரையும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்தான் அது.

இப்போதைய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அது சாத்தியமல்ல. அரசியல் சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான பலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு இல்லை.

இந்நிலையில் அரசின் இந்த முயற்சி அதன் தேர்தல் பிரசாரமாகவே அமையும். அதாவது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களோடு தேர்ந்தெடுக்கப்பட்டால் முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவருவோம் என்ற மறைமுகமான தேர்தல் பிரச்சாரம்தான் இது.

சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான பிரதமர் மோடி அரசின் இந்த நகர்வுக்கு, சமூக நீதிக் கொள்கை ஜாம்பவான்கள் யாரும் தேவையான அளவுக்கு எதிர்வினை ஆற்றவில்லையே! ஏன்??

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...