Tuesday, January 8, 2019

விஸ்வாசம் இல்லாத ரஜினி!!

நன்றி(விஸ்வாசம்) கெட்ட ரஜினி!!
------------------------------------------------------------

நாய்களைச் சுடுவதைப்போல் தமிழர்களைச் சுட்டுத்தள்ளியது தமிழகக்காவல்துறை . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைக் கலவரமாக மாற்றி குளிர் காய்ந்தன மத்திய மாநில அரசுகள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டே ஆக வேண்டும். இல்லையேல் ஆளும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கட்சிக்கு பெரும் தேர்தல் நிதி கிடைக்காது .

இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அந்த ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு 'தேச விரோதி'  பட்டம் வழங்கியவர் ரஜினி. அவரது முந்தையப்படங்களான 'காலா' மற்றும் '2.0'  படங்கள்  வியாபார ரீதியாக படுதோல்வி அடைந்தன. அந்தத் தோல்விகளைச் சரிகட்டவே ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை காலவரையின்றி தள்ளிவைத்துவிட்டு தொடர் படங்களில் ஓய்வின்றி நடித்து வருகிறார்.

அஜித் நடித்த 'விவேகம்' எதிர்பார்த்த வெற்றிப்பெறவில்லை. பல கோடிகள் நட்டம் அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கே தன் அடுத்த படத்தையும் நடித்துத்தர ஒப்புக்கொண்டார் அஜித். அதுதான் 'விஸ்வாசம்' !

தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளருக்கு அஜித் தனது விஸ்வாசத்தைக்காட்டும் வகையில் படம் பொங்கலுக்கு வெளியிட ஒரு வருடத்துக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

'காலா' மற்றும் '2.0' படங்களின் படுதோல்வியை சரிகட்ட ரஜினி அவசர அவசரமாக அறிவித்து நடித்தப்படம் 'பேட்ட' . இப்படத்தை திடீரென்று பொங்கல் வெளியீடாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

தமிழர்களின்  நீண்ட விழாக்கால விடுமுறையில் படத்தை வெளியிட்டால்தான் அதிக லாபத்தை அள்ள முடியும் என்பது இரு படத்தயாரிப்பாளர்களின் திட்டம். சன் நிறுவனத்தைக்காட்டிலும் நீண்ட கால அனுபவ மிக்க தயாரிப்பு நிறுவனம் சத்தியஜோதி நிறுவனம். 'விவேகம்' படத்தின் நட்டத்தை சரி கட்டவே சத்திய ஜோதி நிறுவனம் 'விஸ்வாசம்' படத்தை திட்டமிட்டு  பொங்கலுக்கு வெளியிடுகிறது என்பதை ஒட்டுமொத்தத் திரையுலகம் அறியும். எனவே, 'பேட்ட' படத்தைக்காரணம் காட்டி ' விஸ்வாசத்தை' தள்ளி வைக்க வாய்ப்பேயில்லை.

பொங்கல் போட்டியில் திடீரென்று நுழைந்தது ரஜினிதானே தவிர, ஊடகங்கள் சொல்வதுப்போல் அஜித் அல்ல.

எதற்கு இத்தனை விளக்கம் என்றால் , அஜித் எப்போதும் தமிழக மக்களூக்கு ஆதரவாகவும் கருத்து சொன்னதில்லை. எதிராகவும் கருத்து சொன்னதில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி உயிரிழந்த மக்களுக்கு 'தேச விரோதி' பட்டம் தந்த ரஜினி இன்றுவரை அதை திரும்பப்பெறவே இல்லை.

'காலா' படத்தில் தோல்விக்கு ' தேச விரோதி ' பட்டம் ஒரு முக்கியக்காரணம் என்று திரையுலக பிரமுகர்களே ஒப்புக்கொண்டனர். '2.0' தானாகவே ஊற்றிக்கொண்டப் படம்.

இதோ ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்து விட்டது. மீண்டும் தமிழக மக்கள் அந்த ஆலையை எதிர்த்துப் போராடுவது உறுதி. இப்போதாவது ரஜினி தூத்துக்குடி மக்களுக்கு வழங்கிய 'தேச விரோதி ' பட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பேட்டைக்கும் காலாவின் நிலை ஏற்படக்கூடாதல்லவா ?

- மாதவி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...