Monday, January 7, 2019

கருஞ்சட்டையும் வெறுங்கொட்டையும்!!

கருஞ்சட்டையும் வெறும் கொட்டையும் !!
--------------------------------------------------------------------

தலைப்பில் உள்ள 'வெறும் கொட்டை' க்கானப் பொருள் , பழத்தை ருசித்துவிட்டு துப்பும் கொட்டை எனக்கொள்க.

தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளில் , கட்சி சாராத நிலையில் , தமிழர் என்ற அடிப்படையில் பல லட்சம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் இவர்களது பங்கு முக்கியமானது. பலத்தேர்தல்களில் வெற்றித் தோல்வியை இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நிற்க-

அண்மையில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியால் காவிக்கூட்டம் நிலைகுலைஞ்து போயுள்ளது. ஆனால், அப்பேரணி குறித்து அவதூறான செய்திகளை அவர்களே நிறுத்திக்கொண்டனர். ஆனால், தங்களை திராவிட இயக்கதூண்கள் என்று நினைத்துக்கொள்ளும் சிலர் , மீண்டும் மீண்டும் கருஞ்சட்டைப் பேரணி குறித்து இழிவாகப் பேசி வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 'இணையதள தி.மு.க'  என்றப்பெயரில்  ஈழ விடுதலை மற்றும் விடுதலைப்புலிகள் இயகக்கம் குறித்து இவர்கள்    கக்கிய விஷமே மயிரிழையில் தி.மு.கவை தோல்வியடையச்செய்தது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் , எல்லோரும் தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் , மீண்டும் சில 'டான்'கள் , 'யுவ கிருஷ்ணா' க்கள், 'தளபதி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானாலும் எங்களுக்கு கவலை இல்லை' என்றுப் பேசி வருகின்றனர். மிகத்தெளிவாக மீண்டும் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி ஆட்சி மலர அவர்கள் வேலை பார்க்க தொடங்கி விட்டனர்.

'கருஞ்சட்டைப் பேரணியில், மாநாட்டில்  அண்ணா மற்றும் கலைஞருக்கு ஏன் கட்டவுட் வைக்கவில்லை? ' எனக்கேட்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதற்கு மாநாட்டு அமைப்பாளர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். மாநாட்டில் 'தலைவர் பிரபாகரனுக்கு ஏன் கட்டவுட் வைத்தீர்கள்? ' என்று கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அப்படி கேட்பவன் நிச்சயமாக தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை.

திராவிட இயக்கங்கள், திராவிட கட்சிகள், தமிழக இயக்கங்கள், தமிழகக்கட்சிகள் நடத்தியப் போராட்டங்கள் வேறு . ஈழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் நடத்தியதுப் போராட்டம் அல்ல போர்.

கொடி பிடிப்பதற்கும் , ஆயுதம் ஏந்துவதற்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது. உங்கள் அரிப்பிற்காக ஒரு மாபெரும் விடுதலைப்போராட்டத்தை, ஒரு மாபெரும் தலைவனை கொச்சைப்படுத்தாதீர்கள்.

அதிகப்பட்சம் ஒரு கவுன்சிலராகவோ , எம்.எல்.ஏவாகவோ அல்லது எம்.பி.ஆகவா பதவி பெற்று நீங்கள் மடிந்து விடுவீர்கள். உங்கள் கல்லறைக்கும் மாவீரர் துயிலும் மண்ணிர்க்கும் வித்தியாசம் உள்ளது.

மீண்டும் இரண்டாம் பத்தியைப் படிக்கவும்.

- கரிகாலன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...