Monday, July 16, 2018

நலங்கிள்ளி

உலகை வீழ்த்திய 6 கருப்பர்கள்!

பிரெஞ்சு கால்பந்து அணியின் சாமுவேல் உம்டிடி, ரஃபெல் வரானே, ப்ளைசே மட்யுடி, நகோலா கான்டே, பால் போக்பா, கிலியன் எம்பபே (பட வரிசைப்படி) ஆகிய 6 பிரெஞ்சுக் கருப்பர்களும் உலகின் பந்துக் கொடுமுடியில் நிற்கின்றனர்! ஒவ்வொரு பிரெஞ்சு கோலுக்கும் வெள்ளையர்களும் கருப்பர்களும் கட்டிப் புரண்டு குதூகலித்ததும், அதனை பிரெஞ்சு அரங்கே ஆரவாரமாகக் கொண்டாடியதும் காணக் கண்கொள்ளாக் காட்சி!

ஒன்றை மனிதனாய் உதைபந்து நாயகனாய்த் திகழ்ந்த கருமுத்து பீலேயின் பேரப் பிள்ளைகள் இன்று உலகக் கால்பந்தைத் தன்வயப்படுத்தி வருகின்றனர். கருப்பினத்தை உலகின் சிகரத்தில் ஏற்றி வைத்த பிரெஞ்சுத் தேசத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

இறுதிச் சுற்றில் நான்கு பிரெஞ்சு கோல்களில் இரண்டை அடித்தது கருப்பர்கள். அதுவும் பால் போக்பா அடித்த அட்டகாசமான கோல் என்னே அழகு! முதல் அடி குரோயேஷியர் காலில் பட்டுத் திரும்ப, மீண்டும் கொடுத்த வலுவான அடியில் வலையில் சுருண்டது பந்து!

இன்னும் 30 ஆண்டில் உலகக் கால்பந்தை ஆளவிருப்பது கருப்பர்களே என்கின்றனர் கால்பந்து அறிஞர்கள்.

130 கோடி மக்கள் வாழும் இந்தியா! நுழையவே தகுதியில்லை. இது வர்ண-சாதி இந்தியத்தின் தோல்வி! தமிழ்க் கருப்பர்கள் விடுதலை பெற்ற தமிழ்த் தேசத்தின், தமிழீழத்தின் சார்பில் கலந்து கொள்கையில் உலகம் தமிழ் இனத்தையும் கட்டாயம் திரும்பிப் பார்க்கும்!

துறைதோறும் துறைதோறும் பரவட்டும் கருப்பர் வெற்றி! ஒழியட்டும் நிறவெறி! இனவெறி!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...