Wednesday, September 12, 2018

மு.முகமது யூசுப்

ஒரு இஸ்லாமிய பெண்ணின் திருமணம் சம்பந்தமாக எழுந்த சர்ச்சை, சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அதை குறித்து தனது கருத்தை முகநூலில் வெளியிட்டு இருந்தார்.

அது இசுலாமியர்கள் சிலரால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
ஆளுர் ஷாநவாஸ் தனிச் செயற்பாட்டாளராக களத்தில் இயங்கி வந்தவரை , சமூகத்தின் நலன் கருதி அவரை பொது மைய நீரோட்டத்தில் இணைக்கும் பொருட்டு கட்சிக்கு அழைத்துவந்தவன் என்ற முறையில் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

ஷாநவாஸ் பொதுத்தளத்தில் சிறுபான்மையினரின் குரலாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். சமரசம் இன்றி இந்துத்துவாவின் பாசிச கொள்கைகளை எதிர்த்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி வருபவர்.

இசுலாம் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் மார்க்கம் எனும் போது பலரும் பலவிதமான சித்தாந்த புரிதலோடு அதை அணுகுவார்கள். அதற்கான ஜனநாயகத்தை இஸ்லாம் அனைவருக்கும் வழங்குகிறது.

இந்த சர்ச்சையை பெரிதுபடுத்தி பொதுத்தளத்தில் பெரும் குழப்பத்தை விளைவிக்க நமது எதிரிகள் வேட்கையுடன் காத்திருக்கின்றனர்.

முகநூலுக்கு உணர்வுகளை உள்ளபடியே பிரதிபலிக்க தெரியாது , வெறும் எழுத்துக்களினால் நம் இதயக் கூற்றை உள்ளபடியே சொல்லிவிட முடியாது. சமூக ஊடகங்களில் நாம் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் தான் எழுத வேண்டும். ஒரு சிறிய பிசகு கூட பெரும் காயங்களை ஏற்படுத்திவிடும்.

இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தை தனிமைபடுத்தும் பெரும் முயற்சியில் இந்துத்துவா பாசி்ச சக்திகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய மக்களுக்கும் அதன் தோழமை சக்திகளுக்கும் இடையே உள் முரண்களை ஏற்படுத்த எதிரி சக்திகள் முயற்சி செய்கின்றனர். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு நாம் சமுதாயத்தை பலியிட்டுவிடக் கூடாது.

நொடிப்பொழுதும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக சிந்திக்கும் எழுச்சி தமிழர் அவர்கள் சமூகத்தின் எத்தனையோ உள் முரண்களை நீக்கி சமூக ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

இஸ்லாமிய சமூகத்தின் குரல்வளையை நொறுக்கும் பாசிச சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார். ஆதலால் இந்த முரண்களை மறந்து களமாட வேண்டும்.

இந்த சமூகத்திற்கான எங்களின் உண்மையான, உன்னதமான உழைப்பை தட்டிக் கொடுத்தவர்கள் நீங்கள்,

அந்த உரிமையோடு உங்களை நான் கேட்டு கொள்வதெல்லாம்,

மார்க்க அறிஞர்களாகிய நீங்கள், இஸ்லாத்தின் ஒளியில் மனித சமுகத்தின் இருளை நீக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுபவர்கள்.

நாங்கள் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் சமூக விடுதலைக்காக போராடி வருபவர்கள்.

நாம் இணைந்திருந்து செயல்படும் பொழுதுதான் சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியப்படும். இந்த பிரச்சனையை இதற்கு மேலும் கூர் படுத்தி அரசியலாக்க வேண்டாம்.

இந்த சர்ச்சையை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அறிவில் சிறந்த மார்க்க அறிஞர்களையும்,சமூகத் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

மு.முகமது யூசுப்
மாநில பொருளாளர்
வி.சி.க.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...