Saturday, November 10, 2018

மாதவி

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 10000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக்கொள்ளை நோய்களுக்கு மடிந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் இந்த நோய்கள் கடுமையாகத் தாக்கியபோது 'நிலவேம்பு நன்னீரே' மக்களைக்காத்தது. இறப்பு விகிதத்தைத்தடுத்தது . மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'நிலவேம்பு நன்னீரை' சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக விநியோகித்தார்.

ஆனால், வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா ஆட்சி' என்று பிதற்றும் இந்த அரசு, முழுக்க முழுக்க அலோபதி மருந்துகளையே தற்போது நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. அவர்களது 'அம்மா' முதல்வராக இருந்தபோது வழங்கப்பட்டு , டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்திய சித்த மருந்தான 'நிலவேம்பு நன்னீரை ' தற்போதைய அரசு முற்றிலும் புறக்கனித்துவிட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், " டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தீர்க்கும் ஒரே மருந்து  'டாமி ஃப்ளூ' . இதன் விலை  480 ரூபாய். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது ' என்கிறார்.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்த அலோபதியில் மருந்துகளே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. 'டேமி ஃப்ளூ' வெறும் ஏன்டி பையாட்டிக் . இதன் விலை பத்து மாத்திரைகள் ரூபாய் 480. தனியார் மருத்துவர்கள் தற்போது வழங்கும் மாத்திரை 'ஏன்டி ஃப்ளூ ' . இதன் 10 மாத்திரைகள் ரூ 580 ! இது 75 மில்லி கிராம். இரண்டு வயது குழந்தைக்கு காய்ச்சல் என்று மருத்துவரிடம் போனாலும், இதே மாத்திரைதான். மருத்துவர் இதே மாத்திரையை, 30 மில்லிகிராம் என்று எழுதுகிறார். சிப்லா கம்பெனி இந்த மாத்திரையை 75 மல்லி கிராம் என்றே விற்பனைக்கு அனுப்புகிறது. குழந்தைகளுக்கு இந்த ட்யூப் மாத்திரையை எப்படி பாதியாக உடைத்துத் தருவது? என பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

சரி, சுகாதாரத்துறை அமைச்சர்  மற்றும் தனியார் மருத்துவர்கள் தரும் Anti flu மற்றும் Tami flu மருந்துகள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் வல்லமைக் கொண்ட மருந்துகள் என்றால் , தமிழகம் முழுக்க ஏன் கொத்துக்கொத்தாக மக்கள் மடிகின்றனர் ?

ஏற்கனவே இந்த நோய்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்திய சித்த மருந்தான 'நிலவேம்பு நன்னீரை' அரசு உடனடியாக மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். அரசு சித்த மருத்துவர்களை மற்றும் அரசு ஆங்கில மருத்துவர்களை கவுரவம் பார்க்காமல் சுகாதாரத்துறை இணைக்க வேண்டிய காலமிது.

ஆங்கில மருத்துவமா ? சித்த மருத்துவமா? என்கிறப் போட்டியில், ஒருபுறம் கோடிக்கணக்கில் அரசு வெறும் Anti biotic மருந்துகளை மக்கள் வரிப்பணத்தில் வாங்கி வீணடிக்கிறது. மறுபுறம் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஊடகங்கள் சர்கார் படப்பிரச்சனை , மற்றும் சந்திரபாபு நாயுடு வருகை போன்றக் குப்பை செய்திகளை ஒதுக்கிவிட்டு , 24 மணி நேரமும் இந்த உயிர்கொல்லி நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் தெருக்கள் தோறும் 'நிலவேம்பு நன்னீரை' மக்களுக்கு அரசும் , அரசியல் கட்சிகளும் இலவசமாக வழங்கவேண்டும்.

- தாகம் இதழுக்காக...மாதவி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...